போம்புகா தீவு

ஆள்கூறுகள்: 8°14′24″N 93°14′06″E / 8.24°N 93.235°E / 8.24; 93.235
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bompuka Island
உள்ளூர் பெயர்: போகாட்
Bompuka Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
Bompuka Island
Bompuka Island
இந்தியாவில் போம்புகா தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்8°14′24″N 93°14′06″E / 8.24°N 93.235°E / 8.24; 93.235
தீவுக்கூட்டம்நிக்கோபார் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • போம்புகா
பரப்பளவு9.31 km2 (3.59 sq mi)
நீளம்4.5 km (2.8 mi)
அகலம்2.5 km (1.55 mi)
கரையோரம்13.3 km (8.26 mi)
உயர்ந்த ஏற்றம்193 m (633 ft)
உயர்ந்த புள்ளி[1]
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை0
அடர்த்தி0 /km2 (0 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744301
Telephone code03192
ISO codeIN-AN-00[2]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in

போம்புகா தீவு (Bompuka Island) இந்திய ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள ஒரு தீவாகும். போகாட் தீவு என்றும் இது அழைக்கப்படுகிறது.

புவியியல்[தொகு]

தெரசா தீவிலிருந்து 3.5 கி.மீ தொலைவில் போம்புகா தீவு அமைந்துள்ளது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் அடர்த்தியான காடுகளும் சில பகுதிகளில் புல்லும் காணப்படுகிறது. தீவைச் சுற்றியுள்ள கரையில் அடர்த்தியாக தேங்காய் மரங்கள் வளர்ச்சி காணப்படுகிறது. கைவிடப்பட்ட போகாட் கிராமம் தீவின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தெரசா மற்றும் போம்புகா தீவுகளுக்கு இடையிலான கடலின் பகுதி கப்பல்களுக்கு நல்ல தங்குமிடத்தை வழங்குகிறது.

மக்கள்தொகை[தொகு]

வடக்கில் போகாட் கிராமம் தெற்கில் இயட்கிரானா கிராமம் என்ற இரண்டு கிராமங்கள் போம்புகா தீவில் இருந்தன. இவை இரண்டும் கைவிடப்பட்ட கிராமங்களாகும். தெரசா தீவிலிருந்து சில தேவைகளை சுமந்து கொண்டு முன்னாள் கிராமவாசிகள் ஒரு குறுகிய காலத்திற்கு போம்புகா தீவுக்கு வசிக்க வருகின்றனர். தேங்காய், கிழங்கு பயிர்களை இவர்கள் அங்கு பராமரிக்கின்றனர். [4] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி போம்புகா தீவில் மக்கள் எவரும் இல்லை. 21 பேர் கொண்ட இத்தீவின் முழு மக்கள் தொகையும் சுனாமியைத் தொடர்ந்து தெரசா தீவுக்கு குடிபெயர்ந்தனர். தீவில் வசிப்பிடத்தை மீட்டெடுக்க அவர்கள் முயற்சித்தாலும் முயற்சிகள் அனைத்தும் , தோல்வியுற்றன.

நிர்வாகம்[தொகு]

போம்புகா தீவு தெரசா தாலுகாவின் நாங்கோரி நகரத்திற்கு சொந்தமானதாகும். [5]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ebook Sailing guide / Guide nautique. Sea Seek. January 2016. பக். 34. http://www.sea-seek.com/ebook/Andaman_sea.pdf. 
  2. Registration Plate Numbers added to ISO Code
  3. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
  4. Andaman and Nicobar Islands, Development Report, India. Planning Commission, 2008, p. 120, ISBN 9788171886524
  5. "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 3 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போம்புகா_தீவு&oldid=3053394" இலிருந்து மீள்விக்கப்பட்டது