உள்ளடக்கத்துக்குச் செல்

போப்ஜிகா பள்ளத்தாக்கு, பூடான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பு கழுத்து நாரை

போப்ஜிகா பள்ளத்தாக்கு (ஆங்கிலம்: Phobjikha Valley) ஒரு பரந்த யு-வடிவ பனிப்பாறை பள்ளத்தாக்கு ஆகும், இது கேங்டெங் என்றும் அழைக்கப்படுகிறது. இது மத்திய பூட்டானில் உள்ள நைங்மா பிரிவின் கேங்டெங் மடாலயத்தின் பெயரால் ஈர்க்கப்பட்டு அதன் பெயர் வைக்கப்பட்டது. திபெத்திய பீடபூமியிலிருந்து பூட்டானின் குளிர்காலத்தில் அழகிய கருப்பு-கழுத்து நாரைகள் இப்பள்ளத்தாக்குக்கு வருகை தருகிறது. அக்டோபர் கடைசி வாரத்தில் போப்ஜிகா பள்ளத்தாக்குக்கு வந்ததும், கறுப்பு-கழுத்து நாரைகள் கேங்டெங் மடாலயத்தை மூன்று முறை வட்டமிடுகின்றன, மேலும் திபெத்துக்குத் திரும்பும் போதும் இந்த செயல்முறையையே மீண்டும் செய்கின்றன.[1][2] :152–154

பூட்டானில் நன்கு அறியப்பட்ட சதுப்பு நிலத்துடன் கூடிய இந்த பரந்த பள்ளத்தாக்கு, அதன் அழகிய காட்சி மற்றும் கலாச்சார தனித்துவத்திற்காக பிரபலமானது. இந்த பள்ளத்தாக்கு விலங்கியல் பல்லுயிர் பெருக்கத்தால் நிறைந்துள்ளது. மேலும் இங்கு கறுப்பு-கழுத்து நாரைகள் தவிர, உலகளவில் அழிவிற்கு ஆளாகும் 13 இனங்களும் உள்ளன. பள்ளத்தாக்கின் எல்லைக்குள், சுமார் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi) பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த இயற்கையின் பாதுகாப்பிற்காக "ராயல் சொசைட்டி ஃபார் தி ப்ரொடெக்ஷன் ஆஃப் நேச்சர்" (ஆர்.எஸ்.பி.என்) என்ற அமைப்பு, விவசாய அமைச்சக்கத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் அனுமதி பெற்று நிர்வகிக்கிறது.

பூட்டானின் வண்ணமயமான "முகமூடி நடன விழா" மற்றும் குளிர்கால மாதங்களில் கருப்பு-கழுத்து நாரைகளை வரவேற்கும் "நாரைத் திருவிழா" ஆகிய இரண்டும் ஒவ்வொரு ஆண்டும் போப்ஜிகா பள்ளத்தாக்கின், கேங்டெங் மடாலயத்தின் வளாகத்தில் நடைபெறுகின்றன. மேலும் இது ஒரு பிரபலமான மூன்று நாள் மலையேற்ற நடைபாதை வழியையும் கொண்டுள்ளது.

காலநிலை

[தொகு]

இந்தப் பள்ளத்தாக்கு மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ளதால் அதிக பனிப்பொழிவை கொண்டுள்ளது. குளிர்காலங்களில் பள்ளத்தாக்கு பனியால் மூடப்பட்டிருக்கும். இந்தப் பள்ளத்தாக்கில் சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மிதமான தட்பவெப்பநிலை நீடிக்கும். திசம்பரில் பதிவு செய்யப்பட்ட சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை −4.8 °C (23.4 °F) ஆகஸ்டில் பதிவு செய்யப்பட்ட சராசரி அதிகபட்ச வெப்பநிலை 19.9 °C (67.8 °F) மழைப்பொழிவு 1,472–2,189 மில்லிமீட்டர்கள் (58.0–86.2 அங்) வரை மாறுபடும்.[3]

புள்ளி விவரங்கள்

[தொகு]

போப்ஜிகா பள்ளத்தாக்கு மத்திய பூட்டானில் உள்ள வாங்டூ போட்ராங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கில் சுமார் 4,716 பேர்[3] கேங்டெங் மற்றும் பிற கிராமங்களில் வசிக்கின்றனர். பள்ளத்தாக்குக்கு மேலே அமைந்துள்ள கேங்டெங் மடாலயத்தில். குளிர்காலத்தில் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். அப்போது துறவிகள் உட்பட பள்ளத்தாக்கில் வசிக்கும் சில மக்கள் (ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில்) சுமார் 3,000 கிலோமீட்டர்கள் (1,900 mi) சாலை வழியாக பயணித்து வாங்டூ போட்ராங் பகுதிக்கு இடம் பெயர்கிறார்கள். இந்தப் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் ஒரு சிறப்பு அடையாளத்தைக் கொண்டுள்ளனர். அவர்களின் மொழி கென்கே எனப்படும் ஒரு பேச்சு வழக்கு ஆகும். (பழங்கால திபெத்திய மொழியாகக் கருதப்படுகிறது ) இது பும்தாங் மொழிகளின் குழுவின் கீழ் உள்ள ஒரு மொழி ஆகும். கறுப்பு மலைத்தொடர் பிராந்தியத்தில் நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் யாக்-மேய்ப்பர்கள் வசிக்கின்றனர். பூட்டானின் ஆன்மீக சாரத்தைக் கொண்டிருக்கும் பான் மதத்தை, இன்னும் ஒருசில கிராமவாசிகளால் பின்பற்றப்படுகிறது.

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

[தொகு]

கறுப்பு மலைத்தொடரின் பின்னணியில் உள்ள அழகிய போப்ஜிகா பள்ளத்தாக்கு, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வளமான பல்லுயிர் தன்மையைக் கொண்டுள்ளது. இது, கேங்டெங் மடாலயத்தின் மத முக்கியத்துவத்துடன் சேர்ந்து, மத மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவை பள்ளத்தாக்குக்கு ஈர்த்துள்ளது.[4]

தாவரம்

[தொகு]

போப்ஜிகா பள்ளத்தாக்கு ஒரு சதுப்பு நிலப்பகுதியாகும். மேலும் இங்கு கால்நடைகள் மற்றும் குதிரைகளின் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. ஒரு சிறப்பு வகையான சிறிய அளவிலான மூங்கில் இங்கு வளர்கிறது. மேலும் இந்தப் பள்ளத்தாக்கு குளிகாலத்தில் கருங்கழுத்து நாரைகள் வளரவும் உணவளிக்கவும் இடமளிக்கிறாது. உருளைக்கிழங்கு பள்ளத்தாக்கில் வளர்க்கப்படும் முக்கிய பணப் பயிராகும். கோசுக்கிழங்கும் இங்கு வளர்க்கப்படுகின்றன. நீல பைன், பிர்ச், மேப்பிள் மற்றும் பல வகையான மலர்களைக் கொண்ட பசுமை மாறாச் செடி வகைகளும் இங்குக் காணப்படுகின்றன.[3]

பயிர்கள்

[தொகு]

பள்ளத்தாக்கில் மண் மற்றும் வளிமண்டல நிலைமைகள் பூச்சிகள் மற்றும் நோய்களிலிருந்து காப்பற்றப்படுவதால் பள்ளத்தாக்கு அதன் விதை உருளைக்கிழங்கு பயிருக்கு பெயர் பெற்றது. இது தேவை அதிகம் உள்ளதால் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, இது பள்ளத்தாக்கின் ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களை பண்ணைகளாக மாற்ற பள்ளத்தாக்கில் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது, அதன் நீர் வெளியேற்றத்தின் பகுதியை வடிகட்டுவதன் மூலம் பணப்பயிர்களை உற்பத்தி செய்கிறது. இருப்பினும், பள்ளத்தாக்கில் உள்ள கறுப்பு-கழுத்து நாரைகளின் வாழ்விடத்தை பாதுகாப்பதற்காகவும், அதனுடன் இணைந்த சுற்றுலாவிற்காகவும், புகழ்பெற்ற கேங்டெங் மடாலயத்தின் மத முக்கியத்திற்காகவும், ராயல் சொசைட்டி ஃபார் தி ப்ரொடெக்ஷன் ஆஃப் நேச்சர் (ஆர்.எஸ்.பி.என்) போன்ற அமைப்புகளுடன் இணைந்து பள்ளத்தாக்கு நிலத்தை பண்ணைகளாக மாற்றுவதை நிறுத்த பூட்டான் அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. விதை உருளைக்கிழங்கை வளர்க்க பண்ணைகளை உருவாக்க போப்ஜிகா பள்ளத்தாக்கின் ஈரநிலங்கள் அதிக அளவில்[5][6] இருப்பினும், நாரைகள் இங்கு அதிக மதிப்பு வாய்ந்ததால், இங்கு உருளைக்கிழங்கை வளர்க்க முடியாதவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்படுகிறது.[7] போப்ஜிகா பள்ளத்தாக்கிலுள்ள நாரைகளில் சுற்றுலாவின் தாக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[8]

விலங்குகள்

[தொகு]
குரைக்கும் மான்(கேளையாடு)

இதைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு மற்றும் மலைகள் வனவிலங்குகளால் நிறைந்தவை. கேளையாடு ( குரைக்கும் மான் ), காட்டுப்பன்றிகள், கடமான், இமயமலை கருப்புக் கரடி, இமயமலை ஆடுகள், சிறுத்தைகள் மற்றும் நரிகள் ஆகியவை பதிவு செய்யப்பட்ட விலங்கினங்கள் ஆகும்.[9]

காட்சிகள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 'Branch Post Office Phubjikha' in A list of Bhutanese Post Offices in Postal Himal, 4th Quarter 1992 http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/postalhimal/pdf/PH_1992_003.pdf
  2. "Biodiversity Action Plan 2009" (PDF). UNDP Org. pp. 2–3, 16. Archived from the original (PDF) on 2012-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  3. 3.0 3.1 3.2 "Gangtey in Phubjikha Valley: Glacial Valley of Phobjikha". Windhorse Tours. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  4. Brown, Lindsey; Mayhew, Bradley; Armington, Stan; Whitecross, Richard (2009). Bhutan. Penguin. pp. 152–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74059-529-7. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  5. Train, Russel E. (2003). Politics, Pollution, and Pandas: an Environmental Memoir. Island Press. pp. 294–295. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-55963-286-0. பார்க்கப்பட்ட நாள் 2010-08-23.
  6. Brown, Lindsey (2009). Bhutan. Penguin. pp. 152–154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-74059-529-7. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.
  7. Doswell, Roger (1997). Tourism: How Effective Management Makes the Difference. Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-2272-5. பார்க்கப்பட்ட நாள் 2010-08-19.
  8. Meine, Curt (1996). The Cranes: Status Survey and Conservation Action Plan. IUCN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-8317-0326-3. பார்க்கப்பட்ட நாள் 2010-08-25.
  9. Bhutan. பார்க்கப்பட்ட நாள் 2010-08-22.