உள்ளடக்கத்துக்குச் செல்

போபிதோரா காட்டுயிர் காப்பகம்

ஆள்கூறுகள்: 26°14′28″N 92°03′30″E / 26.24111°N 92.05833°E / 26.24111; 92.05833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Pobitora Wildlife Sanctuary
ஒலிப்பு [ˈpəʊbɪˌtɔ:rə]
போபிடோரா வனவிலங்கு சரணாலயத்தில் இந்திய காண்டாமிருகம்
Map showing the location of Pobitora Wildlife Sanctuary
Map showing the location of Pobitora Wildlife Sanctuary
இந்தியாவின் அசாமில் உள்ள இடம்
அமைவிடம்மரிகாவன் மாவட்டம், அசாம்
அருகாமை நகரம்குவகாத்தி
ஆள்கூறுகள்26°14′28″N 92°03′30″E / 26.24111°N 92.05833°E / 26.24111; 92.05833[1]
பரப்பளவு38.85 km2 (15.00 sq mi)
நிறுவப்பட்டது1987
www.pobitora.com

போபிதோரா காட்டுயிர் காப்பகம் (Pobitora Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் வட கரையில் மரிகாவன் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுயிர் காப்பகமாகும். இது காட்டுயிர் காப்பகமாக 1987 ஆம் ஆண்டு 38.85 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இக்காப்பகப் புல்வெளி, ஈர நிலம் இந்திய மூக்குக்கொம்பனின் வாழிடமாக உள்ளது. அதிக அளவிலான இந்திய மூக்குக்கொம்பன் இங்கு வாழ்கின்றது.[2][1]

பல்லுயிர்ப் பன்முகத்தன்மை

[தொகு]
போபிதோரா வனவிலங்கு சரணாலயத்தில் காண்டாமிருகம்

போபிதோரா காட்டுயிர் காப்பகத்தின் புல்வெளி குறைந்தது 15 புல் இனங்களைக் கொண்டுள்ளன. இதில் சைனோடன் டாக்டிலோன், விப் புல் (கெமார்த்ரியா கம்ப்ரெசா) வெட்டிவேர் (கிரைசோபோகன் ஜிசானியோயிட்சு) இரவணன் புல் (சாக்காரம் ராவெனா) ப்ராக்மிட்சு கார்கா, தெற்கு வெட்டுப்புல் (லீர்சியா கெக்சாண்ட்ரா) மற்றும் சமிக்கைப் புல் (ப்ராச்சியாரியா சூடோஇன்டெர்ரப்டா) ஆகியவை அடங்கும். இந்தப் புல்வெளிகள் இந்தியக் காண்டாமிருகங்களுக்கு வாழ்விடத்தையும் உணவு வளத்தையும் வழங்குகின்றன. இங்கு அதிக எண்ணிக்கையில் இவை உள்ளன.[1] இக்காட்டுயிர் காப்பகத்தில் காணப்படும் பிற பாலூட்டிகள் பொன்னிறக் குள்ளநரி, காட்டுப்பன்றி மற்றும் காட்டு நீர் எருமை ஆகும். கேளையாடு, இந்தியச் சிறுத்தை மற்றும் செம்முகக் குரங்கு ஆகியவை மலைப்பகுதிகளில் முதன்மையாக வாழ்கின்றன.[3] இது ஒரு முக்கியமான பறவைகள் வாழும் பகுதி ஆகும். சுமார் 2000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் பல்வேறு ஊர்வனவற்றின் இருப்பிடமாகவும் இது உள்ளது.[4]

அமைவிடம்

[தொகு]

போபிதோரா சரணாலயம், பிரிக்கப்படாத நாகோன் மற்றும் இன்றைய மோரிகான் மாவட்டத்தில் உள்ள மாயாங்கில் பிரம்மபுத்திரா மற்றும் கலாங் ஆறுகளால் உருவாக்கப்பட்ட நிலப்பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. இது நாகோன் நகரத்திலிருந்து 83 கிமீ தொலைவிலும், மோரிகான் நகரத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[5]

தட்பவெப்பம்

[தொகு]

போபிதோரா காட்டுயிர் காப்பகத்தில் மிதமான காலநிலை நிலவுகின்றது. மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. இங்கு 70 முதல் 90 சதவீதம் மழை பெய்யும். இருப்பினும், குளிர்காலத்தில் இயற்கையாகவே மழையளவு குறைந்து காணபப்டும். பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 90 பாகை செல்சியசு ஆகும்.[6]

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Konwar, P.; Saikia, M. K.; Saikia, P. K. (2009). "Abundance of food plant species and food habits of Rhinoceros unicorns Linn. in Pobitora Wildlife Sanctuary, Assam, India". Journal of Threatened Taxa 1 (9): 457–460. doi:10.11609/JoTT.o1640.457-60. Konwar, P.; Saikia, M. K. & Saikia, P. K. (2009). "Abundance of food plant species and food habits of Rhinoceros unicorns Linn. in Pobitora Wildlife Sanctuary, Assam, India". Journal of Threatened Taxa. 1 (9): 457–460. doi:10.11609/JoTT.o1640.457-60.
  2. Choudhury, A. U. (1985). "Distribution of Indian one-horned rhinoceros". Tigerpaper 12 (2): 25–30. 
  3. Choudhury, A. (2005). "Threats to the greater one-horned rhino and its habitat, Pabitora Wildlife Sanctuary, Assam, India". Pachyderm 38: 82–88. https://www.researchgate.net/publication/278055523. 
  4. Islam, Z.; Rahmani, A. (2004). IBAs in India. Mumbai and Cambridge: Bombay Natural History Society and Birdlife International.
  5. +92.054615&num=1&vpsrc=0&ie=UTF8&t=m&z=13&iwloc=A গুগল মেপত পবিতৰাৰ স্থানাংক আৰু মানচিত্ৰ. আহৰণ কৰা তাৰিখ: ০৩-০৭-২০১২
  6. দিপন চন্দ্ৰ নাথ/""পবিতৰা অভয়াৰণ্যৰ ইতিবৃত্ত"'/সপ্ত-সিন্ধু প্ৰকাশন, মৰিগাঁও

வெளி இணைப்புகள்

[தொகு]