உள்ளடக்கத்துக்குச் செல்

போன்செலே புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போன்செலே புள்ளி

வடிவவியலில், தரப்பட்ட நான்கு புள்ளிகளில் போன்செலேட் புள்ளி (Poncelet point, போன்செலே புள்ளி) என்பது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

தளம் ஒன்றில் உள்ள A, B, C, D என்ற நான்கு புள்ளிகள் செங்கோட்டுச்சந்தித் தொகுதியை அமைக்காது எனக் கொள்க. முக்கோணங்கள் ABC, BCD, CDA, DAB ஆகியவற்றின் ஒன்பது-புள்ளி வட்டங்கள் A, B, C, D ஆகிய புள்ளிகளின் போன்செலே புள்ளி என்ற ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. தளத்தில் உள்ள A, B, C, D என்ற நான்கு புள்ளிகள் செங்கோட்டுச்சந்தித் தொகுதியை உருவாக்கும் எனில் முக்கோணங்கள் ABC, BCD, CDA, DAB அனைத்தும், ஒரே ஒன்பது-புள்ளி வட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vonk, Jan (2009), "The Feuerbach point and reflections of the Euler line" (PDF), Forum Geometricorum, 9: 47–55
"https://ta.wikipedia.org/w/index.php?title=போன்செலே_புள்ளி&oldid=2607690" இலிருந்து மீள்விக்கப்பட்டது