உள்ளடக்கத்துக்குச் செல்

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°57′00″N 76°59′00″E / 10.95000°N 76.98333°E / 10.95000; 76.98333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

10°57′00″N 76°59′00″E / 10.95000°N 76.98333°E / 10.95000; 76.98333

போத்தனூர் சந்திப்பு
தொடருந்து நிலையம்
போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்போத்தனூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு
இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ஜோலார்பேட்டை–சோரனூர் பிரிவு
கோயம்புத்தூர்–பொள்ளாச்சி வழி
நடைமேடை5
இருப்புப் பாதைகள்8
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on-ground station)
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுPTJ
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1862; 163 ஆண்டுகளுக்கு முன்னர் (1862)
மின்சாரமயம்உள்ளது

 

சேலம்–பாலக்காடு வழித்தடம்
கி.மீ.
39 
மேட்டூர் அணை
27 
மேச்சேரி சாலை
19 
தொளசம்பட்டி
11 
ஓமலூர் சந்திப்பு
3 
மேக்னசைட் சந்திப்பு
0
சேலம் சந்திப்பு
சேலம் எஃகு ஆலை
8
நெய்க்காரபட்டி
11
வீரபாண்டி சாலை
22
மகுடஞ்சாவாடி
34
மாவெலிபாளையம்
39
சங்கரி துர்க்கம்
47
ஆனங்கூர்
57
காவிரி
62
ஈரோடு சந்திப்பு
69
தொட்டியாபாளையம்
76
பெருந்துறை
81
ஈங்கூர்
89
விஜயமங்கலம்
99
ஊத்துக்குளி
102
திருப்பூர் கூலிபாளையம்
112
திருப்பூர்
திருப்பூர்-அவிநாசி சாலை
120
வஞ்சிபாளையம்
130
சோமனூர்
139
சூலூர் சாலை
145
இருகூர் சந்திப்பு
162
போத்தனூர் சந்திப்பு
14 
சிங்காநல்லூர்
9 
பீளமேடு
0 
கோயம்புத்தூர் சந்திப்பு
3 
கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு
17 
பெரியநாயக்கன்பாளையம்
28 
காரமடை
36 
மேட்டுப்பாளையம்
ஏசிசி லிமிடெட் தொழிற்சாலை
166
மதுக்கரை
171
எட்டிமடை
180
வாளையார்
184
சுள்ளிமடை
191
கஞ்சிக்கோடு
199
கொட்டேக்காடு
206
பாலக்காடு சந்திப்பு

போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடுஃ PTJ) கோயம்புத்தூர் போத்தனூரில் உள்ள ஒரு இந்திய தொடருந்து நிலையமாகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் வருகிறது மற்றும் இந்திய ரயில் நிலைய வகைப்பாட்டு முறையின் கீழ் என். எஸ். ஜி-5 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாறு.

[தொகு]

மேற்குக் கடற்கரையை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் போத்தனூர்-சென்னை பாதையின் ஒரு பகுதியாக 1862 ஆம் ஆண்டில் போத்தனூரில் ரயில் நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் கோயம்புத்தூரில் ரயில் சேவை தொடங்கியது.[1] இது இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்குள் செயல்படும் மூன்றாவது ரயில் நிலையமாகும்.போத்தனூரை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கும் கிளை வழித்தடம் 1873 பிப்ரவரியில் செயல்படத் தொடங்கியது. 1956 வரை, கோயம்புத்தூர் ரயில்வே பிரிவு போத்தனூரை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வந்தது, தலைமையகம் ஓலவக்கோட்டுக்கு மாற்றப்பட்டது, பின்பு இது பாலக்காடு தொடருந்து கோட்டமாக மாறியது.[2] இந்த நிலையம் 2006 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் தொடருந்து கோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது என். எஸ். ஜி-5 நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது (வருடாந்திர வருவாய் 10 முதல் 100 மில்லியன் ரூபாய் மற்றும் 1 முதல் 2 மில்லியன் பயணிகள் கையாளப்படுகிறார்கள்.[3]  

தொடருந்து பாதைகள்

[தொகு]

இந்த நிலையத்தில் ஐந்து நடைமேடைகள் உள்ளன. இந்த நிலையம் ஜோலார்பேட்டை-ஷோரனூர் பாதை மற்றும் கோயம்புத்தூர்-பொள்ளாச்சி பாதை மற்றும் கோவை-மேட்டுப்பாளையம் பாதை ஆகியவற்றின் சந்திப்பாக செயல்படுகிறது.[4]

சேவைகள்

[தொகு]

இந்த நிலையம் நீண்ட தூர ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்களை கையாளுகிறது. [5] கோயம்புத்தூர்-பொள்ளாச்சி வழித்தடத்தின் பாதை மாற்றம் முடிந்த பிறகு, இந்த நிலையம் கோயம்புத்தூர் சந்திப்பு துணை ரயில் நிலையமாக செயல்படுகிறது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [6][7][8][9][10]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [11][12][13][14][15][16][17][18][19][20]

மேலும் காண்க

[தொகு]
  • கோயம்புத்தூரில் போக்குவரத்து

குறிப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]


சான்றுகள்

[தொகு]
  1. "IR History–Early days". IRFCA. Archived from the original on 7 மார்ச்சு 2005. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2013.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Old என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. "Southern Railway list of stations" (PDF). Centre For Railway Information Systems. 1 ஏப்பிரல் 2023. p. 1. Archived from the original (PDF) on 23 மார்ச்சு 2024. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  4. "Podanur Junction". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2024.
  5. "Welcome to Indian Railway Passenger reservation Enquiry". Indian Railways. Archived from the original on 3 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டெம்பர் 2013.
  6. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  7. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  8. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  9. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  10. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  11. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  12. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  13. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Feb/22/15-railway-stations-in-salem-division-to-be-upgraded-2549648.html
  14. https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=16014&id=0,4,268
  15. https://www.pressreader.com/india/the-hindu-erode-9WW6/20240603/281578065800613
  16. https://www.thehindu.com/news/cities/Coimbatore/foundation-laid-for-redevelopment-of-eight-stations-in-salem-railway-division-under-amrit-bharat-station-scheme/article67887945.ece
  17. https://www.youtube.com/watch?v=_9JwQKh7iM0
  18. https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/amrit-bharat-project-foundation-laying-ceremony-of-podanur-railway-station/articleshow/102475620.cms
  19. https://www.thehindu.com/news/cities/Coimbatore/works-at-podanur-under-amrit-bharat-railway-station-scheme-to-be-completed-by-january-2024/article67235186.ece
  20. https://www.facebook.com/SouthernRly/posts/podanur-junction-revamp-works-are-in-full-swing-under-the-amritbharatstationsche/690870439888353/