போதிநாத வேலன்சாமி
போதிநாத வேலன்சாமி Bodhinatha Veylanswami | |
---|---|
போதிநாத வேலன்சாமி | |
பிறப்பு | பெர்க்லி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | 15 அக்டோபர் 1942
சத்குரு போதிநாத வேலன்சாமி (Bodhinatha Veylanswami, பிறப்பு: அக்டோபர் 10, 1942, கலிஃபோர்னியா), இந்து சந்நியாசி மற்றும் சமயத் தலைவரும், அவாயில் அமைந்துள்ள கௌவை இந்து ஆதீனத்தின் தலைவரும் ஆவார். சைவ ஆகமங்கள், மறைபொருள் வேதங்கள், மற்றும் சைவம் சார்ந்த பல ஆக்கங்களையும் கணினி மயமாக்குதல் முயற்சி எடுத்து, அவற்றை இலவசமாக வழங்குவதிலும் பெயர் பெற்றவர்.[1]
போதிநாத வேலன்சாமி, இந்து சமயத்தில் செல்வாக்கு மிக்க சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமியின் வழித்தோன்றலாக நியமிக்கப்பட்டவர்.
சீர்திருத்த சைவ சித்தாந்த சர்ச்
[தொகு]போதிநாதரின் சீர்திருத்தம் சைவக் கவாய் இந்து மடாலயம், ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிருக பலிகளை பாரம்பரிய சைவத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சீர்திருத்தத்தில் உறுதியாக நிற்கிறது.
"மத்ஸ்யம் என்பது உண்மையில் மீனைக் குறிக்கவில்லை, இங்கே. மீன், பன்றி, செம்மறி ஆடு போன்ற பொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருட்களை ஆசாரியார் நன்கு அறிந்திருக்க வேண்டும். மீன் அல்லது இறைச்சி உண்மையில் வழங்கப்படுகிறது என்ற எண்ணத்துடன் அவர் பிரதிநிதி உருப்படியை வழங்க வேண்டும். ஆகமங்களில், மீன் அல்லது இறைச்சி பிரசாதம் அல்லது விலங்குகளைக் கொல்வதற்கு இடமில்லை."[2]
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ஹவாய், கௌவாஹி இந்து ஆதீனம் - (ஆங்கில மொழியில்)
- இந்து சமயம் இன்று (இதழ்) - (ஆங்கில மொழியில்)
- சைவ இந்து மதம்