உள்ளடக்கத்துக்குச் செல்

போண்டார்னாவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போண்டார்னாவைட்டு
Fontarnauite
போண்டார்னாவைட்டு, அணடோலியா, மேற்கு துருக்கி
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடு(Na,K)2(Sr,Ca)(SO4)[B5O8(OH)]·2H2O
இனங்காணல்
நிறம்இலேசான பழுப்பு
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{010} இல் சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை2.5 - 3
மேற்கோள்கள்[1][2]

போண்டார்னாவைட்டு (Fontarnauite) என்பது (Na,K)2(Sr,Ca)(SO4)[B5O8(OH)]*2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய சல்பேட்டு போரேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. ஆவியாகும் போரான் படிவில் போண்டார்னாவைட்டு காணப்படுகிறது. மற்ற ஆவியாகும் போரான் தாதுக்களுடன், குறிப்பாக புரோபெர்டைட்டுடன் இணைந்து காணப்படுகிறது. P21/c என்ற இடக்குழுவில் ஒற்றைச் சாய்வச்சில் படிகமாகிறது.[3][1]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் போண்டார்னாவைட்டு கனிமத்தை Fon[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பார்சிலோனா பல்கலைக்கழகத்தின் பொருள் விஞ்ஞானியான ரமோன் போண்டர்னாவு ஐ கிரியேராவின் நினைவாக போண்டார்னாவைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Mindat
  2. Mineralienatlas
  3. García-Veigas, J., Rosell, L., Alcobé, X., Subias, I., Ortí, F., Gündoğan, İ., and Helvaci, C., 2010. Fontarnauite, a New Sulphate-Borate Mineral from the Emet Borate District (Turkey). Revista de la Sociedad Española de Mineralogía 13, 97-98
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போண்டார்னாவைட்டு&oldid=4258206" இலிருந்து மீள்விக்கப்பட்டது