போட்வினிக் எதிர் கேபபிளாங்கா
போட்வினிக் X கேபபிளாங்கா (Botvinnik Versus Capablanca) இருவருக்கும் இடையிலான சதுரங்கப் போட்டி 1938 [1] ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டின் ராட்டர்டேம் நகரில் நடைபெற்ற ஏ.வி.ஆர்.ஓ சதுரங்கப்போட்டியின் 11 ஆவது சுற்றில் இடம்பெற்றது. வெள்ளைக் காய்களுடன் விளையாடிய போட்வினிக் முன்னாள் உலக சதுரங்க சாம்பியனான கேபபிளாங்காவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சதுரங்க வரலாற்றில் [2][3] இந்த ஆட்டம் மிகவும் பிரபலமான ஆட்டமாகும் எனக் கருதிய காரி காசுப்பரோ பின் வருமாறு எழுதியுள்ளார்.
போட்வினிக்கு கேபபிளாங்காவுக்கு எதிராக விளையாடிய அந்த ஆட்டம் அவரது வாழ்க்கை முழுவதற்குமாக கிடைத்த ஒரே ஆட்டமாகும். மிகவும் புத்திசாலித்தனமும் இரண்டு முதல் பரிசுகளுக்கு சமமான மதிப்புள்ள ஆட்டமது என்று மட்டும் அதை கருதமுடியாது. ஆனால் அந்த ஆட்டம் ஓர் இறவாத புகழ் பெற்ற ஆட்டம் என்றும் ஒப்புமை கூற முடியாத ஒரு பாரம்பரிய ஆட்டம் என்றும் காசுப்பரோ குறிப்பிட்டுள்ளார் ![4]
ஆட்டம்
[தொகு]வெள்ளை: மிக்கைல் போட்வினிக்
கருப்பு: யோசு கேபபிளாங்கா
போட்டி: ஏ.வி.ஆர்.ஓ சதுரங்கப்போட்டி
இடம்: ராட்டர்டேம், நெதர்லாந்து
சதுரங்கத் திறப்பு: நிம்சோ-இந்தியத் தடுப்பு (இ49)
1. d4 Nf6 2. c4 e6 3. Nc3 Bb4 4. e3 d5 5. a3 Bxc3+ 6. bxc3
- வெள்ளைக்கு ஒரே வரிசையில் இரட்டித்த சிப்பாய்கள் அமைகிறது. ஆனால் அச்சிக்கல் விரைவில் நீங்குகிறது.
6... c5 7. cxd5 exd5 8. Bd3 0-0 9. Ne2 b6 10. 0-0 Ba6 11. Bxa6 Nxa6 12. Bb2 Qd7 13. a4 Rfe8 14. Qd3 c4
- பதிலாக 14...Qb7 என விளையாடியிருக்கலாம் என்று போட்வினிக் பரிந்துரைக்கிறார்.
15. Qc2 Nb8 16. Rae1 Nc6 17. Ng3 Na5? 18. f3
- பலகையின் மையப் பகுதியில் சிப்பாய்களின் பெரும்பான்மையை அதிகரித்து பின்னர் ராசாவை தாக்குவதற்கான இடவசதியை ஏற்படுத்திக் கொள்ள வெள்ளை திட்டமிட்டு அதற்காக முன் தயாரிப்பில் போட்வினிக் ஈடுபடுகிறார். கருப்பின் குதிரை b3 சதுரத்தில் புறக்காவல் பணிக்காக நிறுத்தப்படுகிறது என்றாலும் வெள்ளைக் காய்களின் முன்னேற்றத்தை அதனால் தடுக்க முடியவில்லை.
18... Nb3 19. e4 Qxa4 20. e5 Nd7 21. Qf2 g6 22. f4 f5 23. exf6 e.p. Nxf6 24. f5 Rxe1 25. Rxe1 Re8? 26. Re6 Rxe6 27. fxe6 Kg7 28. Qf4 Qe8 29. Qe5? Qe7?[5] (see diagram)
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
- கிரகாம் பர்கெசு பரிந்துரையின் படி[6] 29...h6! 30.h4! (30.Ne2!? என்று விளையாடி சமநிலை முடிவுக்கு கருப்பு முயற்சித்திருக்கலாம். 30...Na5! 31.Bc1! Qe7 32.Bg5! வெள்ளைக்கு வெற்றி வாய்ப்பு; இருப்பினும் இந்த முறை நகர்வு சிறிதளவு தந்திரத்துடன் திட்டமிட்ட நகர்வாக இருந்திருக்கும்.
30. Ba3!
- வெள்ளை சிப்பாயை நகரவிடாமல் தடுக்கும் கருப்பு ராணியை இந்த நகர்வு விரட்டுகிறது.
30... Qxa3
- என்று கருப்பு விளையாடினால் கருப்பின் ஆட்டம் அவ்வளவுதான். ஏனெனில் 31 வெள்ளை (31.e7) என்று விளையாடி வெற்றியின் பக்கத்தில் சென்றுவிடும்.
31. Nh5+!
- குதிரைத் தியாகத்தை கருப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் அது கருப்பு ராசா மற்றும் குதிரைக்கு இரட்டைத் தாக்குதல் கொடுக்கிறது. கருப்பு குதிரை வெள்ளைக் குதிரையை எடுக்க முடியாது. அடுத்த நகர்வில் வெள்ளை ராணி இரட்டைத்தாக்குதல் மூலம் குதிரையை எடுத்து விடும்.
31... gxh5 32. Qg5+ Kf8 33. Qxf6+ Kg8 34. e7 Qc1+ 35. Kf2 Qc2+ 36. Kg3 Qd3+ 37. Kh4 Qe4+ 38. Kxh5 Qe2+ 39. Kh4 Qe4+ 40. g4 Qe1+ 41. Kh5
- தொடர் முற்றுகைகள் கொடுப்பதால் கருப்புக்கு எந்த பலனும் இல்லை. Qf8# நகர்வின் மூலம் வெள்ளை வெற்றிக்காக காத்திருக்கிறது.
ஒருவேளை கருப்பு 41...h6 என்று விளையாடினால் வெள்ளை 42.Qg6+ Kh8 43.e8=Q+, என்று விளையாடி பின்னர் 43...Qxe8 44.Qxe8+ Kg7 45.Qe7+ எனத் தொடர்ந்து 46.Kxh6 மற்றும் 47.Qg7#. என முடிந்து விடும். 1–0
- கருப்பு தோல்வியை ஒப்புக் கொண்டது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Winter, Edward. "Chess Jottings". www.chesshistory.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2017.
- ↑ This was to be their last game before Capablanca's 1942 death. All together, they played seven other games of tournament chess. This includes another game at AVRO 1938 with colours reversed, which was drawn. The then 14 year old Botvinnik also beat Capablanca in a simultaneous game in 1925.
- ↑ "Mikhail Botvinnik vs Jose Raul Capablanca (1938) "A Thing of the Passed"". ChessGames. பார்க்கப்பட்ட நாள் January 1, 2012.
- ↑ Kasparov 2003, 125
- ↑ Loy, Jim (2003). "M. Botvinnik - J. R. Capablanca, 1938 AVRO Tournament". Archived from the original on January 5, 2012. பார்க்கப்பட்ட நாள் January 2, 2012.
- ↑ Burgess, Nunn, & Emms, 2004, pp. 167-68