போடோ இலக்கிய மன்றம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போடோ இலக்கிய மன்றம் அல்லது போடோ சாகித்திய சபை என்பது போடோ மொழியின் இலக்கியத்தை வளர்த்தெடுக்க அமைக்கப்பட்ட மன்றம். அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா, நாகாலாந்து, திரிப்புரா, நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் போடோ மொழி இலக்கியவாதிகள், இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.
வரலாறு
[தொகு]இந்திய விடுதலைக்குப் பின்னரும், போடோ மொழிக்கான வளர்ச்சி இல்லாமையை மக்கள் உணர்ந்தனர். அதன் தொடர்ச்சியாக, போடோ இலக்கிய மன்றம் உருவானது. தொடர் போராட்டங்களினால், போடோ மொழி கல்வி மொழியாக்கப்பட்டது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், போடோ இலக்கியத்தை பாடமாக அறிமுகப்படுத்தின. பின்னர், அசாம் அரசும் போடோ மொழியை துணை ஆட்சி மொழியாக ஏற்றது. இது மத்திய அரசின் உதவியுடன், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அறிவியல், கலைச் சொற்களை போடோ மொழியில் உருவாக்க முனைந்துள்ளது.