போங் நா-கே பாங்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |


போங் நா-கே பாங் (வியட்நாமிய மொழிe: Vườn quốc gia Phong Nha-Kẻ Bàng) வியட்நாமின் குவாங் பின் என்னும் மாகாணத்திலுள்ள ஒரு தேசிய பூங்கா ஆகும். இந்த மாகாணத் தலைநகரமான டாங் ஓயில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், வியட்நாமின் தலைநகர் அனோயில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இதற்கு "சான் டூங்" என்று பெயர். யாருடைய கண்களுக்கும் தட்டுப்படாத, இந்த அதிசைய குகை 1991ஆம் ஆண்டில்தான் வெளிச்சத்துக்கு வந்தது.பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சியாளர்கள் இக்குகையை கண்டுபிடித்தனர். இங்கே 70 கிலோமீட்டர் மொத்த நீளம் கொண்ட 300 குகைகள் காணப்படுகின்றன. உயரம் 80 மீட்டர், அகலம் 80 மீட்டர்.இவற்றுள் சுமார் 20 கிலோமீட்டர் நீளம் கொண்ட பகுதியை வியட்நாமிய அறிவியலாளர்களும், பிரித்தானிய அறிவியலாளர்களும் ஆய்வு செய்தனர். இப் பூங்காவில் பல நிலக்கீழ் ஆறுகள் உள்ளதுடன், உயிரியல் பல்வகைமைத் தன்மை கொண்டதாகவும் விளங்குகிறது.50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால்,இக்குகை உருவானதாக்க் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே "மழை ஆறு" என்ற பொருளுள்ள "சான் டூங்" என்ற பெயர் இக்குகைக்கு வைக்கப்பட்டதாக கூறுகின்றனர். 2003 ஆம் ஆண்டில் யுனெசுக்கோ இதனை ஒரு உலக பாரம்பரியக் களமாக அறிவித்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு 2009இல் இக்குகை உலகின் மிகப்பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.