உள்ளடக்கத்துக்குச் செல்

போங்கி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போங்கி மொழி
Bonggi Language
Banggi
நாடு(கள்)மலேசியா
பிராந்தியம்சபா
இனம்1,400 (1990)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
?  (2006)[1]
ஆஸ்திரோனீசிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3bdg
மொழிக் குறிப்புbong1289[2]

போங்கி மொழி (ஆங்கிலம்: Bonggi language, Banggi) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தின் வடக்கு முனையில் உள்ள பங்கி தீவுகள் மற்றும் பாலம்பாங்கான் தீவுகளில் (Balambangan Island) வாழும் போங்கி இன மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தின் ஒரு மொழியாகும்.[3] இம்மொழியைப் பேசுபவர்கள் சபா மாநிலத்தின் கூடாட் பிரிவில் பரவலாகக் காணப்படுகின்றனர்.

1990-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மலேசியாவின் சபா மாநிலப் பகுதியில் பேசப்படும் போங்கி மொழி சுமார் 1,400 தாய்மொழிப் பேச்சாளர்களைக் கொண்டிருந்தது. தற்போது, 1,500-க்கும் குறைவான மக்களால் மட்டுமே பேசப்படும் இந்த மொழி,[4] அழியும் நிலையில் உள்ள மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மொழி வகைப்பாடு

[தொகு]

போங்கி மொழி ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழிகளின் கீழ் உள்ள வடக்கு போர்னியோ மொழிகள் பிரிவில் வகைப்படுத்தப் பட்டுள்ளது. சபாவின் பிற பழங்குடி மொழிக் குழுக்களான டூசுன் (Dusunic), மூருட் (Murutic) அல்லது பைத்தான் (Paitanic) ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளுக்குள் போங்கி மொழி அடங்குவதில்லை; மாறாக, இது ஒரு தனித்துவமான மொழியாகக் கருதப்படுகிறது.

பிலிப்பீன்சில் பேசப்படும் மொல்போக் மொழியுடன் இது நெருங்கிய தொடர்புடையது என்றும், இவை இரண்டும் இணைந்து மொல்போக்-போங்கி (Molbog-Bonggi) என்ற நுண்குழுவை உருவாக்குகின்றன என்றும் சில மொழியியலாளர்கள் கருதுகின்றனர். கடசான்-டூசுன் பண்பாட்டுக் கழகத்தின் ஆய்வுகளின்படி, போங்கி மொழி கடசான்-டூசுன் மொழியின் ஒரு வட்டார வழக்காகவும் சில சமயங்களில் கருதப்படுகிறது.

எழுத்து முறை

[தொகு]

1980-களின் பிற்பகுதியில் இருந்து போங்கி மொழிக்கு இலத்தீன் எழுத்துமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மொழியில் முறையான இலக்கண வரிவடிவம்[5] குறைவாகவே உள்ள போதிலும், ஒலிப்பு அடிப்படையிலான எழுத்துக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இம்மொழியில் ஓர் அகரவரிசையும், விவிலிய மொழிபெயர்ப்பும் அச்சிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 போங்கி மொழி
    Bonggi Language
    at Ethnologue (18th ed., 2015)
  2. ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Bonggi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. ↑ Bonggi Wordlists and Their Implications
  4. ↑ Bonggi Wordlists and Their Implications Non-Malayic languages of Borneo Get access Arrow Paul Kroeger, Alexander D. Smith
  5. ↑ "Bonggi language". Omniglot. Retrieved 30 August 2021.

நூல்கள்

[தொகு]
  • Boutin, Michael E. (1994). Aspect in Bonggi (PhD thesis). University of Florida – via the Internet Archive. (இம்மொழியின் ஒலியியல், உருபனியல் மற்றும் பாங்கி, பாலம்பாங்கன் தீவுகளின் வட்டார வழக்குகள் குறித்த விரிவான கள ஆய்வுத் தரவுகள் இதில் உள்ளன).
  • Kroeger, Paul & Smith, Alexander D. (2024). "Non-Malayic languages of Borneo". In Alexander Adelaar & Antoinette Schapper (Eds.), The Oxford Guide to the Malayo-Polynesian Languages of Southeast Asia. Oxford University Press. (வடக்கு போர்னியோ பகுதி மொழிகளின் வகைப்பாடு மற்றும் ஆஸ்ட்ரோனேசிய மொழிகளுடனான தொடர்பு குறித்த அதிகாரப்பூர்வ நூல்).
  • Eberhard, David M., Gary F. Simons, and Charles D. Fennig (Eds.). (2026). Ethnologue: Languages of the World. Twenty-seventh edition. SIL International.SIL International. (2025). Bonggi language vitality and local interest in language-related efforts: A participatory sociolinguistic study.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போங்கி_மொழி&oldid=4625798" இலிருந்து மீள்விக்கப்பட்டது