போக சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போக சீனிவாசன் (Bhoga Srinivasa) என்பது வெள்ளியிலான முதன்மைத் தெய்வத்தின் (துருவ பெரா) வடிவமாகும். இந்தியாவின் ஆந்திராவின் திருமலையில் உள்ள திருமலை வெங்கடாசலபதி கோயிலின் முதன்மை தெய்வம் துருவ பெரா எனப்படும். மேலும் இத்தெய்வம் மனவாலப்பெருமாள் என்றும் காட்டுக பெரா என்றும் அறியப்படுகிறது.தினசரி திருமுழுக்கு வழிபாட்டின் (தோமல சேவையின் ஒரு பகுதியாக) போதும் ஏகாந்த சேவையின் போது இறைவனின் இந்த உருவம் பயன்படுத்தப்படுகிறது. இத்தெய்வம் துருவ பேராவின் சாரீரத்தை ஊக்குவிப்பதாகவும், பக்தர்களின் விருப்பங்களை வழங்குவதாகவும் நம்பப்படுகிறது.

614CEஇல் பல்லவ இராணி சமவாய் என்பவரால் போகா சீனிவாசன் சிலை கோயிலுக்கு வழங்கப்பட்டு புனிதப்படுத்தப்பட்டார்.[1] இவர் இந்த தெய்வச்சிலையுடன் கோயிலுக்கு நிலம் மற்றும் தங்கத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இச்சிலை என்பது துருவ பேராவின் உண்மையான நகலாகும்.[2]பிதம் மற்றும் தெய்வத்தின் கால்களுக்குக் கீழே ஒரு எந்திரம் உள்ளது. இது இரண்டு இடைப்பட்ட சமபக்க முக்கோண வடிவத்தில் உள்ளது. தெய்வம் ஒரு பட்டுத் தண்டு மூலம் துருவ பெராவுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது. துருவ பெராவுக்கு பிரதிநிதித்துவம் செய்வதற்காகத் தெய்வத்தைக் கருவறைக்கு வெளியே கொண்டு வரும்போது, தண்டு இணைக்கப்பட்டுத் தங்க இணைப்புகளுடன் வலுவூட்டப்படுகிறது.[3] 

மேற்கோள்கள்[தொகு]

  1. Rao, S. K. Ramachandra. The hill-shrine of Veṅgaḍam : art, architecture, and āgama of Tirumala temple. Kalpatharu Research Academy. 
  2. "Tirupathi - Tirumalai - Sri Srinivasa Perumal Temple". Divyadesam.com. Archived from the original on 2007-01-28. பார்க்கப்பட்ட நாள் 2007-04-19.
  3. Ramesan, N. (1981). The Tirumala Temple. Tirumala Tirupati Devasthanams. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போக_சீனிவாசன்&oldid=3083563" இலிருந்து மீள்விக்கப்பட்டது