போக்னாபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போக்னாபம்
Poknapham
வகைதினசரி நாளிதழ்
வடிவம்அகன்ற தாள்
உரிமையாளர்(கள்)குருமாயும் சாந்திகுமாரி தேவி
வெளியீட்டாளர்குருமாயும் சாந்திகுமாரி தேவி
ஆசிரியர்ஏ.ரொபிந்ரோ சர்மா
நிறுவியது1 பிப்ரவரி 1975
மொழிமைட்டி
தலைமையகம்இம்பால்
இணையத்தளம்www.poknapham.in

போக்னாபம் (Poknapham) இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து வெளியாகும் ஒரு செய்தித்தாளாகும்.[1] வங்காள மொழி எழுத்துகளில் வெளியிடப்படும் இச்செய்தித்தாள் அதிகமான மக்களால் படிக்கப்படுகிறது. போக்னாபம் என்றால் மைட்டி மொழியில் "பிறந்த இடம்" என்பது பொருளாகும். இம்பாலின் கெய்சம்பத் தியாம் இலெய்ராக்கு நகரைச் சேர்ந்த குருமயம் சாந்திகுமாரி தேவி என்பவருக்கு இச்செய்தித்தாள் சொந்தமானதாகும். இம்பால் நகரிலுள்ள பத்மா அச்சகத்தில் அச்சிட்டு இவரே வெளியீட்டாளராகச் செயல்படுகிறார். தற்போது உரோபிந்திரோ சர்மா இச்செய்தித்தாளின் ஆசிரியராக உள்ளார்.

போக்னாபம் செய்தித்தாள் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இணையதளத்தில் போக்னாபமின் நிகழ்நேர பதிப்பு 2008 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இணையதளத்தில் நிகழ்நேரத்தில் வெளியிடப்படும் முதல் மைட்டி மொழி செய்தித்தாள் இதுவாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. RNI | Reg. No.28436/1975 | Name: POKNAPHAM | Publication City: IMPHAL | Link: http://rni.nic.in/registerdtitle_search/registeredtitle_ser.aspx

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்னாபம்&oldid=3850639" இலிருந்து மீள்விக்கப்பட்டது