போக்குரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புவாமுலா தீவில் போக்குராவில் விளையாடும் சிறுவர்கள்

போக்குரா (Bokkura) என்பது மாலத்தீவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய மரக்கலன் ஆகும். அந்நாட்டில் பயன்படுத்தப்படும் தோணி எனப்படும் மரக்கலனைப் போலக் காணப்படும் இக்கலம் உருவில் சற்று சிறியதாகும். முக்கோணப்பாய் இல்லாமல் இரண்டு அல்லது மூன்று நபர்கள் பயணம் செய்யக்கூடிய அளவுக்கு சிறியதாக இருக்கும்[1] . போக்குராவில் வழக்கமாக இரண்டு துடுப்புகள் பயன்படுத்தப்படும். ஆழம் அதிகமில்லாத பவழப்பாறைகளுக்கு அருகில் மீன் பிடிக்கச் செல்வதற்கு இக்கலம் பயன்படுத்தப்படும் அல்லது கடலுக்குள் நங்கூரமிட்டுள்ள மீன்பிடி படகுகள், வர்த்தகக் கப்பலகள்[2] ஆகியனவற்றிற்கு ஆட்கள் மற்றும் பொருட்களை மாற்றிவிட இப்போக்குராக்கள் பயன்பட்டன. அதிலும் குறிப்பாக யெட்டி எனப்படும் தோணித்துறைகள் இருக்குமிடங்களில் இவை அதிகம் பயன்பட்டன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Exploitation of Reef Resources". Food and Agriculture Organization. பார்க்கப்பட்ட நாள் 12 March 2010.
  2. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. p. 55
  3. visittomaldives. "Bokkura (small traditional vessel of Maldives) | Visit to Maldives". Visittomaldives.wordpress.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-21.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bokkura
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்குரா&oldid=1977465" இலிருந்து மீள்விக்கப்பட்டது