போகோனா
| போகோனா புதைப்படிவ காலம்:மியோசின் முதல் | |
|---|---|
| போகோனாபோகோனா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | உர்வா
|
| மாதிரி இனம் | |
| போகோனாபோகோனா லின்னேயஸ், 1758 | |
| சிற்றினம் | |
|
அட்டவணையில் | |
போகோனா (Phocoena) என்பது நான்கு சிற்றினங்களைக் கொண்ட போர்போயிசுகளின் ஒரு பேரினமாகும்.
போகோனா பேரினம் கடற்பாலூட்டி குடும்பமான சீடேசியாவில் போகோனிடே வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம் நான்கு சிற்றினங்களை உள்ளடக்கியது. இந்த நான்கு சிற்றினங்கள்: போகோனா போகோனா, போகோனா சைனசுசு, போகோனா இசுபினிபின்னிசு, போகோனா டையோப்ட்ரிகா ஆகும். இதில் போ. போகோனா போகோனா, போ. போகோனா வொமெரின், போ. போகோனா ரெலிக்டா உள்ளிட்ட மூன்று துணையினங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த துணையினங்கள் முறையே அத்திலாந்திக்கு, பசிபிக் மற்றும் கருங்கடலில் காணப்படுகின்றன.[2]
இந்தப் பேரினத்தில் உள்ள போர்போயிசு சிற்றினங்கள் பல ஒத்த உருவவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த பாலூட்டிகள் சிறியவை, இவற்றின் கரங்களும் சிறியவை. இவற்றின் உடலின் நீளம் அதிகபட்சமாக 250 செ.மீ. வரை உள்ளது. ஓங்கில்களுடன் ஒப்பிடுகையில் இவை வெளிப்புற அலகினைக் கொண்டிருக்கவில்லை.[3] உணவிற்காக இதன் சிற்றினங்கள் வேட்டையாடப்படுகின்றன.
| படம் | அறிவியல் பெயர் | பொதுவான பெயர் | பரவல் |
|---|---|---|---|
| போகோனா டையோப்ட்ரிகா | கண்கவர் போர்போயிஸ் | குளிர்ந்த துணை அந்தார்டிகா, குறைந்த அண்டார்டிக் நீரில் வட்டவடிவம் | |
| போகோனா போகோனா | துறைமுக போர்போயிஸ் | வடக்கு அத்லாந்திக், வடக்கு பசிபிக், கருங்கடலின் குளிரான கடலோர நீர்நிலைகள் | |
| போகோனா சைனசுசு | வாக்விடா | கலிபோர்னியா வளைகுடாவின் வடக்குப் பகுதி, அல்லது கோர்டெசு கடல் | |
| போகோனா இசுபினிபின்னிசு | பர்மிஸ்டரின் போர்போயிஸ் | தென் அமெரிக்கா கடற்கரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Phocoena Cuvier 1816 (porpoise) Osteichthyes - Delphinoidea - Phocoenidae PaleoDB taxon number: 63542 Alternative spellings: Delphinus (Phocaena), Phocaena Synonyms: Acanthodelphis Gray 1866 (no. 102874), Australophocaena Barnes 1985 (no. 63546), Australophocoena Barnes 1985 (no. 129115), Phocaena (Acanthodelphis) Gray 1866 (no. 91956) Parent taxon: Phocoenidae according to F. G. Marx et al. 2016".
- ↑ Fajardo-Mellor, L., A. Berta, R. Brownell Jr., C. Boy, G. P.. 2006. THE PHYLOGENETIC RELATIONSHIPS AND BIOGEOGRAPHY OF TRUE PORPOISES (MAMMALIA: PHOCOENIDAE) BASED ON MORPHOLOGICAL DATA. Marine Mammal Science , 22/4: 910-932. Accessed September 20, 2021 at https://onlinelibrary-wiley-com.ezproxy2.library.colostate.edu/doi/full/10.1111/j.1748-7692.2006.00080.x
- ↑ Read, A. 2018. Porpoises, Overview. Pp. 770-772 in Encyclopedia of Marine Mammals , Vol. n/a, 3 Edition. Online: Academic Press. Accessed October 19, 2021 at https://doi.org/10.1016/B978-0-12-804327-1.00205-3 .