போகாவோ ஆறு
தோற்றம்
| போகாவோ ஆறு | |
|---|---|
![]() |
போகாவோ ஆறு (Bhogavo River) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் பாயும் ஒரு ஆறாகும். [1] இது சபர்மதி ஆற்றின் ஒரு முக்கிய வலது கரைத் துணை ஆறாகும். சுரேந்திரநகர் நகரம் போகாவோ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தோலித்வாஜா அணை இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. 'கைட்' திரைப்படத்தின் இறுதிக்காட்சிகள், அகமதாபாத்திலிருந்து 90 கி.மீ. தொலைவில், போகாவோ ஆற்றங்கரையில் அமைந்துள்ள லிம்ப்டி நகரில் படமாக்கப்பட்டன. அரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த துறைமுக நகரமான லோத்தல், போகாவோ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Limbdi Bhogavo River". Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department. Retrieved 6 March 2017.
- ↑ Centre, UNESCO World Heritage. "Archaeological remains of a Harappa Port-Town, Lothal". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). Retrieved 2022-10-19.
