போகாரோ நதி

ஆள்கூறுகள்: 23°46′52″N 85°52′37″E / 23.78111°N 85.87694°E / 23.78111; 85.87694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகாரோ நதி
Bokaro River
நாடு இந்தியா
மாநிலம் சார்க்கண்ட்
நகரம் போகாரோ (வெப்ப மின்னுற்பத்தி)

போகாரோ நதி (Bokaro River) என்பது இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆசாரிபாக் மற்றும் போகாரோ மாவட்டங்களுக்கு இடையில் பாயும் ஒரு நதியாகும்.

போக்கு[தொகு]

ஆசாரிபாக்கிற்குத் தெற்கிலுள்ள ஆசாரிபாக் பீடபூமியில் போகாரோ நதி உற்பத்தியாகிறது. ஆனால் சிறிது தூரத்திலேயே தெற்கு முகத்திற்குத் தொலையோரப் பகுதியாகி இயிலிங்கா மற்றும் இலங்கு குன்றுகளுக்கு[1] இடையிலுள்ள குறுகிய மற்றும் அழகான சமவெளியில் பாய்கிறது. மேலும், மேற்கு போகாரோ மற்றும் கிழக்கு போகாரோ நிலக்கரி சுரங்கங்களுக்கு இடையிலும் பாய்கிறது[2][3]. தாமோதர் ஆற்றில் கலப்பதற்கு முன்னர் கோனார் நதியிலும் போகாரோ நதி பாய்கிறது[1]

தடுப்பணை[தொகு]

கோணார் நதியுடன் சங்கமிப்பதற்கு முன்னரே ஓரிடத்தில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து போகாரோ மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படுகிறது[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போகாரோ_நதி&oldid=3565735" இருந்து மீள்விக்கப்பட்டது