பொலம்பூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொலம்பூண் என்பது பொன்னால் செய்யப்பட்ட பூண் கவச அணி, இந்த அணிகலனை அணிந்திருந்தவர் என்று சங்கநூல்களில் குறிப்பிடப்படுவோர் பின்வருமாறு.

 • திருமால் மின்னல் ஒளி போல் பொலம்பூண் அணிந்திருந்தான்.[1]
 • பொலம்பூண் ஐவரும் மற்றும் பல குறுநில மன்னர்களும் கூடியிருந்து தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுச்செழியனை வாழ்த்தினர். [2]
 • பொலம்பூண் எவ்வி - நீழல் என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட கொடையாளி அரசன் [3]
 • பொலம்பூண் எழினி ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியனைத் தாக்கிய எழுவர் கூட்டணியில் ஒருவன் [4]
 • பொலம்பூண் கிள்ளி - காவிரிப்பூம்பட்டினத்து அரசன் கோசர் படையைத் துகளாக்கியவன். [5]
 • பொலம்பூண் திரையன்.- பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட அரசன் [6]
 • பொலம்பூண் நன்னன் புன்னாட்டைக் கவர்ந்துகொண்டதால் அதனை ஆண்ட அரசன் ஆண்ட அரசன் ஆஅய்-எயினன் நன்னின் படைத்தலைவனான மிஞிலியொடு பொருது மாண்டான் [7]
 • பொலம்பூண் நன்னன், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலொடு பொருது தன் நாட்டை இழந்தான் [8]
 • பொலம்பூண் வளவன் - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் [9]
 • பொலம்பூண் வேந்தர் [10]

அடிக்குறிப்பு[தொகு]

 1. பரிபாடல் 13-10
 2. மதுரைக்காஞ்சி 775
 3. அகநானூறு 366-12
 4. அகநானூறு 36-16
 5. அகநானூறு 205-10
 6. அகநானூறு 340-6
 7. அகநானூறு 396-2
 8. அகநானூறு 199-20
 9. வாய்வாள் வலம்படு தீவின் பொலம்பூண் வளவன் - புறம் 397-22
 10. பதிற்றுப்பத்து 64-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலம்பூண்&oldid=2558034" இருந்து மீள்விக்கப்பட்டது