பொற்றாமரைக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலுள்ள பொற்றாமரைக்குளத்தின் மற்றொரு கோணம்

பொற்றாமரைக்குளம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரையிலுள்ள மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது. தொன்மையான (பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய) பழம்பெரும் நகரம் மதுரை. இக்குளம் செவ்வக வடிவில்,[1] 165 அடி (50 மீட்டர்) x 120 அடி (37 மீட்டர்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக்குளம் என்ற சொல், பொன் + தாமரை + குளம் எனப் பொருள் தரும். இந்தக் குளத்திற்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம், உத்தம தீர்த்தம், ஆதி தீர்த்தம் போன்ற பெயர்களுமுண்டு[2]. இந்த பொற்றாமரைக் குளத்தின் வடக்குக் கரையில் உள்ள தூண்களில் சங்கப் புலவர்களின் உருவங்கள் உள்ளன. தென்கரை மண்டபச் சுவர்களில் திருக்குறள் பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களில் திருவிளையாடல் புராணக் கதைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன[3].

கும்பகோணம்[தொகு]

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரின் நடுவில் பொற்றாமரைக்குளம் என்ற பெயரில் ஒரு குளம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meenakshi Sundareshwara Temple.". பார்த்த நாள் 2012-06-22.
  2. "Pottramarai Kulam (the Golden Lotus Pond).". பார்த்த நாள் 2012-06-22.
  3. "நாரைக்கு முக்தி கொடுத்த நான்மாடக்கூடல் நாயகன்.". பார்த்த நாள் 2012-06-22.

பிற இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்றாமரைக்குளம்&oldid=2262056" இருந்து மீள்விக்கப்பட்டது