பொறையன் பெருந்தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொறையன் பெருந்தேவி என்பவள் அந்துவஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனின் மனைவி. இவளது தந்தை பெயர் 'ஒருதந்தை'. பதிற்றுப்பத்து. ஏழாம்பத்தின் பாட்டுடைத் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இவளது மகன்.[1] இவளது பெயர் தெரியவில்லை. கணவன் பொறையன். எனவே 'பொறையன் பெருந்தேவி' எனக் குறிப்பிடுகின்றனர். கோவலனைக் கொன்ற பாண்டியன் மனைவியைக் 'கோப்பெருந்தேவி' எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதை நினைவுகூரலாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. பதிற்றுப்பத்து, பதிகம் 7
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறையன்_பெருந்தேவி&oldid=2565011" இருந்து மீள்விக்கப்பட்டது