பொரோம்பட்
தோற்றம்
பொரோம்பட் | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி | |
வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 24°48′45″N 93°57′35″E / 24.812546°N 93.959621°E | |
| நாடு | |
| மாநிலம் | மணிப்பூர் |
| மாவட்டம் | கிழக்கு இம்பால் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 6,191 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | ஆங்கிலம் & மணிப்புரியம்[1] |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 795005 |
| வாகனப் பதிவு | MN |
| இணையதளம் | https://imphaleast.nic.in/ |
பொரோம்பட் (Porompat), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.[2]இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு 4.1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,232 குடியிருப்புகள் கொண்ட பொரோம்பட் பேரூராட்சியின் மக்கள் தொகை 6,191 ஆகும். அதில் 2,975ஆண்கள் மற்றும் 3,216 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12.39% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1081 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.81% ஆக உள்ளது. இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் 12.26%, இந்து சமயத்தினர் 67.40%, இசுலாமியர் 19.74%, கிறித்தவர்கள் 0.52% மற்றும் பிற சமயத்தினர் 0.08% வீதம் உள்ளனர். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. p. 78. Archived from the original (PDF) on 13 May 2012. Retrieved 16 February 2012.
- ↑ "Porompat (CT)". 2011 Census of India. Government of India. Archived from the original on 6 September 2017. Retrieved 6 September 2017.
- ↑ Porompat Town Population Census 2011