பொருளாதாரக் குமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பொருளின் உண்மை விலையை விட அதிகமான விலையை ஏற்றி மதிப்பிடும் போது பொருளாதாரக் குமிழ் (Economic bubble) தோன்றுகிறது.[1] [1] [2] பொருளாதாரக் குமிழ் என்னும் நிகழ்வு கி.பி 1600 -இலிருந்து இன்று வரை நடந்து கொண்டு இருக்கின்றது.[2] வரலாற்றின் படி, கி.பி 1630-இல் ஆலந்து நாட்டில் ஏற்பட்ட குமிழில், துலிப் மலர்கள் மிக அதிக விலைக்கு விற்கப் பட்டன. ஒரு மலரின் விலை 3000 முதல் 4200 டச்சு கில்டர் வரை விற்றது. (ஒரு தொழிலாளியின் ஆண்டு வருமானம் 300 கில்டர்கள் மட்டுமே என்பது கவனிக்கத் தக்கது.) [2][3] இதுவே ஐரோப்பாவில் ஏற்பட்ட முதல் குமிழ் என்று கருதப்படுகின்றது.

குமிழினால் வரும் பின் விளைவுகள்[தொகு]

குமிழ் "வெடிக்கும்" போது, பொருள் வளம் பெருஞ் சேதமடையும். குமிழ் உருவாகப் போவதை முன் கூட்டியே அறிய இயலாது எனப் பெரும்பாலான வல்லுநர்கள் கருதுகின்றனர். குமிழை அழிக்க வைக்கும் முயற்சிகள் பெரும் பிரச்சினைகளில் கொண்டு விட்டு விடும்; அதனால், பொறுமையோடு காத்திருந்து, குமிழ் வெடித்த பிறகு, பொருளாதார சட்ட முறைகளைக் (policy) கொண்டு விளைவுகளைச் சரி செய்ய முடியுமா என்று பார்க்க வேண்டும் என்றும் கருதுகின்றனர்.

பணம் செலவிடுதலில் உண்டாகும் விளைவுகள்[தொகு]

குமிழ் தோன்றும் போது, சொத்துக்கள் விலை அளவுக்கு மீறி அதிகமாகும். இதனால், அதன் உரிமையாளர்கள் அதிக செல்வம் தங்களிடம் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதிகமாக செலவும் செய்வார்கள். ஆனால், குமிழ் வெடித்த பிறகு, தங்கள் செல்வம் மிகக் குறைந்து விட்டது போலவும் வருந்துவார்கள். இது போன்ற நிகழ்வுகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்ததை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அமெரிக்காவில், 1970- இல், பணப் பெருக்கம் மிகுதியான போது, பொருட்களின் விலையில் குமிழ்கள் தோன்ற தொடங்கி விட்டன. இதைக் கட்டுப் படுத்த, நடுவண் வங்கி (Central Bank - Federal Reserve) வட்டியை 14%-உக்கும் மேலாக உயர்த்தியது. குமிழ்கள் வெடித்தன, பொருட்கள் விலைகள் குறைந்தன.

குமிழ் தோன்ற காரணங்கள்[தொகு]

குமிழ் தோற்றத்திற்கான சரியான காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.சமுதாயத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியன இதற்கு அடிப்படை காரணங்களாக இருக்கலாம் எனக் கருதப் படுகின்றது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 King, Ronald R.; Smith, Vernon L.; Williams, Arlington W.; van Boening, Mark V. (1993). "The Robustness of Bubbles and Crashes in Experimental Stock Markets". In Day, R. H.; Chen, P. Nonlinear Dynamics and Evolutionary Economics. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-507859-6.
  2. 2.0 2.1 2.2 Shiller, Robert (23 July 2012). "Bubbles without Markets". Project Syndicate. Retrieved 17 August 2012. A speculative bubble is a social epidemic whose contagion is mediated by price movements. News of price increase enriches the early investors, creating word-of-mouth stories about their successes, which stir envy and interest. The excitement then lures more and more people into the market, which causes prices to increase further, attracting yet more people and fueling 'new era' stories, and so on, in successive feedback loops as the bubble grows.
  3. Tulipomania: The Story of the World's Most Coveted Flower & the Extraordinary Passions It Aroused. Mike Dash (2001).
  4. Teeter, Preston; Sandberg, Jorgen (2017). "Cracking the enigma of asset bubbles with narratives". Strategic Organization. 15 (1): 91–99. doi:10.1177/1476127016629880. Archived from the original on 2016-11-10.
  5. Levine, Sheen S.; Zajac, Edward J. (27 June 2007). "The Institutional Nature of Price Bubbles". SSRN 960178.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருளாதாரக்_குமிழ்&oldid=2750107" இலிருந்து மீள்விக்கப்பட்டது