பொருட் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருட்களுக்கு இட்டு வழங்கபெரும் பெயர்ச்சொர்க்களை பொருட்பெயர் என்றழைப்பர். (எ-டு) பை, மரம், காய், கனி.

பொருட்பெயர்[தொகு]

 ஒரு பொருளுக்கு பெயராகிவருவது பொருட்பெயர் ஆகும். 
 இது உயர்திணைப் பொருட்பெயர், அக்றிணைப் பொருட்பெயர் என இரண்டு வகைப்படும். 

உயர்திணைப் பொருட்பெயர்[தொகு]

ஆண்பால் பொருட்பெயர், பெண்பால் பொருட்பெயர்.
 சான்று: முத்து, பேச்சியப்பன், மலர்விழி, தேன்மொழி, அம்மன், பாண்டிமுனி, கருப்பசாமி.

அக்றிணைப் பொருட்பெயர்[தொகு]

 இது இரண்டாகப் பகுக்கப்படும். அவை: உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயர், உயிரற்ற அக்றிணைப் பொருட்பெயர்.
உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயர்[தொகு]
ஒன்று முதல் ஐந்தறிவுள்ள அனைத்தின் பெயர்களும் உயிருள்ள அக்றிணைப் பொருட்பெயரில் அடங்கும்
சான்று: புல், மீன், நாய், யானை.
உயிரற்ற அக்றிணைப் பொருட்பெயர்.[தொகு]
இதில் உயிரற்ற இயற்கைப் பொருட்களும், உயிரற்றசெயற்கைப் பொருட்களின் பெயரும் அடங்கும்.
சான்று: நிலா, வான், மலை, நாற்காலி, கணினி, வண்டி


"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருட்_பெயர்&oldid=1647837" இருந்து மீள்விக்கப்பட்டது