பொரிவிளாங்காய்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொரிவிளாங்காய் தமிழர்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளில் ஒன்று. இது இனிப்பும், உறைப்பும் கலந்த உருண்டை வடிவான பலகாரம். பல நாட்களுக்குப் பழுதடையாது இருக்கக் கூடியது.
பொரிவிளாங்காய் செய்வதற்குத் தேவையான பொருட்கள்[தொகு]
- பொரித்த அரிசி மா (புழுங்கல் அரிசியைப் பொரித்து அரைத்த மா) - 2 சுண்டு
- உளுத்தம்மா - 1 சுண்டு
- சீனி - 3 சுண்டு
- சின்னச்சீரகம் - 3தேக்கரண்டி
- மிளகு - 3தேக்கரண்டி
- செத்தல் மிளகாய் - 10-20
செய்யும் முறை[தொகு]
- சின்னச்சீரகம், மிளகு, செத்தல், மூன்றையும் நன்றாக (தண்ணீர் விடாமல்) அரைத்தெடுக்க வேண்டும்.
- பொரித்த அரிசிமா, உளுத்தம்மா, அரைத்த கலவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.
- சீனியைப் பாணியாகக் காய்ச்ச வேண்டும்.
- காய்ச்சிய சீனிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக மாக்கலவையில் ஊற்றி, லட்டுப் போல விளாங்காயின் அளவில் உருட்டி, உருட்டிப் பிடிக்க வேண்டும்.