பொரிவரை பாறை ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொரிவரை பாறை ஓவியம் (Porivarai Rock art) தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியமாக கருதப்படும் இது, 53 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட ஒரே பாறையில் வரையப்பட்டுள்ளன. மிகவும் தொன்மையானதாகக் கூறப்படும் இப்பாறை ஓவியங்கள் அனைத்தும், சுமார் கி.மு. 2000 வாக்கில் மனித வாழ்வியல் குறித்த வரலாற்று ஆதாரங்களாகவும், அடையாளங்களாகவும் பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.[1]

ஓவிய உருப்படிகள்[தொகு]

பாதுகாப்பற்று சிதையும் நிலையிலுள்ள இந்தப் பாறை ஓவியங்களில், மனித உருவங்கள் நடனமாடும் வகையிலும், போர்க் கருவிகளுடன் சண்டையிடும் காட்சிகளும், யானை மீது போர்க் கருவிகளுடன் அமர்ந்திருக்கும் காட்சிகளும் வரையப்பட்டுள்ளன. மேலும், காட்டெருமைகள் நகர்வது போலவும், மனிதத்தலை குதிரை உடல் கொண்ட கடவுள் உருவம் நிற்பது போன்ற ஓவியங்களும் பொறிக்கப்பட்ட இப்பொரிவரை பெரும்பாறையில், குதிரை, குரங்கு, மாடு, காட்டுப் பன்றி, எருது (ஆண் மாடு), மான், ராட்சத பல்லி, மீன் போன்ற உருவங்களும் காணப்படுகின்றன.[2]

பழமை[தொகு]

பழமையும், பாரம்பரியமும் நிறைந்துள்ள இந்த ஓவியங்கள், சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இடை கற்காலத்தில் மனிதன் கால்நடைகளுடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், பாறைகளில் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த சான்றாதாரங்களாக விளங்கும் இதுவே, தென்னிந்தியாவின் மிகப்பெரியப் பாறை ஓவியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

இந்திய தென்கடை மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டத்தின் இதயப்பகுதியான கோத்தகிரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பொரிவரை என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

புற இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Porivarai: Largest rock art site in South India". www.thehindu.com (ஆங்கிலம்) (June 26, 2016 19:15 IST). பார்த்த நாள் 2016-09-01.
  2. "Rock art site is treasure trove". archives.deccanchronicle.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-09-02.
  3. "Porivarai: Largest rock art site in South India". uk.makemefeed.com (ஆங்கிலம்) (© 2015). பார்த்த நாள் 2016-09-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரிவரை_பாறை_ஓவியம்&oldid=2113164" இருந்து மீள்விக்கப்பட்டது