பொரிப்புள்ளி ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொரிப்புள்ளி ஆந்தை
Mottled Wood Owl by DS.jpg
Mottled wood owl
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: இசுடிரிங்கிபார்மிசு
குடும்பம்: இசுடிரிங்கிடே
பேரினம்: Strix
இனம்: S. ocellata
இருசொற் பெயரீடு
Strix ocellata
(லெசன், 1839)
வேறு பெயர்கள்

Syrnium ocellatum
Bulaca ocellata

பொரிப்புள்ளி ஆந்தை அல்லது மச்ச மர ஆந்தை (Strix ocellata) என்பது இந்தியாவில் காணப்படும் பெரிய ஆந்தை சிற்றினமாகும். இவை தோட்டங்கள் மற்றும் வறண்ட முள் காடுகள் அல்லது விவசாய நிலங்களை ஒட்டிய இலையுதிர் காடுகளில் காணப்படுகின்றன. விடியற்காலை மற்றும் சாயங்கால வேளைகளில் இவை தனித்துவமான ஓசையினை எழுப்பும். இத்தகைய அழைப்புகளால் இவை எளிதில் கண்டறியப்படுகின்றன.

பெயர்கள்[தொகு]

தமிழில்  :பொரிப்புள்ளி ஆந்தை

ஆங்கிலப்பெயர்  :Mottled Wood- Owl

அறிவியல் பெயர் :Strix - ocellata [2]

உடலமைப்பு[தொகு]

48 செ.மீ. - குண்டான தோற்றமும் தரும். இதற்கு காதுத் தூவிகள் இல்லை. முகம் வெள்ளையானது. உடலில் சிவப்பு, பழுப்பு, கருப்பு, வெள்ளை எனப் பல வண்ணங்களில் புள்ளிகளும் நெளியான சிறு கோடுகளும் கொண்டதாக அழகான வயிறும் வெளிர்மஞ்சளாக கருப்புப் பட்டைகளுடன் காட்சி தரும்.

காணப்படும் பகுதிகள் & உணவு[தொகு]

தமிழகம் எங்கும் அடர்த்தியற்ற மரங்கள் நிற்கும் காடுகள், மாந்தோப்புகள், பெரிய புளியமரங்கள் நிற்கும் தோப்புகள் ஆகியவற்றில் ஊர்ப்புறங்களைச் சார்ந்து திரியும் பகலில் இணையாக மரங்களில் பதுங்கி இருந்து இரவில் வெளிப்பட்டு எலி, சுண்டெலி, பறவைகள், ஓணான், நண்டு ஆகியவைகளை இரையாகத் தேடித்தின்னும்.[3] பகலில் தொந்தரவு ஏற்பட்டால், சூரிய ஒளியினைப் பொருட்படுத்தாது தூரமாகப் பறந்து சென்று வேறொரு மரத்தில் அமரும்.[4]

இனப்பெருக்கம்[தொகு]

இனப்பெருக்கப் பருவத்தில் ஹீரட் ட்யுஹீ என மறைவிடத்திலிருந்து வெளிப்படும் முன் குரல் கொடுக்கும் பிற ஆந்தை இனத்தைப் போல மரங்களின் புறக்கிளைகளில் அமராது உயர இலைதழைகளிடையே மறைவாக அமரும் பழக்கம் கொண்டது.ஜனவரி முதல் மார்ச் முடிய மரப்பொந்துகளிலும் பாறை இடுக்குகளிலும் சில குச்சிகள் இறகுகள் ஆகியவற்றை வைத்து 2 முட்டைகள் இடும்.[5]

கேரளாவில் பொரிப்புள்ளி ஆந்தை

கலாச்சாரத் தொடர்பு[தொகு]

பொரிப்புள்ளி ஆந்தையின் வினோதமான அழைப்பு கேரளாவின் சில பகுதிகளில் தீய சகுனத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த அழைப்பு போவா-ஆ (மலையாளத்தில் போகலாம்) என விளக்கப்படுகிறது. இது ஆவி உலகத்திற்கான ஒரு அழைப்பாக கருதப்படுகிறது.[6]

வெளி இணப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Strix ocellata
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Strix ocellata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "பொரிப்புள்ளி ஆந்தை Mottled_wood_owl". 15 அக்டோபர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Blanford WT (1895). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 3. Taylor and Francis, London. பக். 277–278. https://archive.org/stream/birdsindia03oaterich#page/277/mode/1up. 
  4. Rasmussen PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. பக். 242. 
  5. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:77
  6. Vijayaraghavan, B (1986). "Owl beliefs". Newsletter for Birdwatchers 38 (3): 54–55. https://archive.org/stream/NLBW38_3#page/n15/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரிப்புள்ளி_ஆந்தை&oldid=3506097" இருந்து மீள்விக்கப்பட்டது