பொரவாச்சேரி கந்தசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொரவாச்சேரி கந்தசாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திலிருந்து 4 கிமீ, சிக்கலிலிருந்து 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1]

இறைவன்[தொகு]

இங்குள்ள முருகன் வள்ளி தெய்வானையுடன் காணப்படுகிறார். எட்டுக்குடி, எண்கண், சிக்கல் மற்றும் பொரவாச்சேரி ஆகிய ஊர்களில் அமைந்த முருகனின் திருமேனிகள் ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டதாகக் கூறுவர். [1]

அமைப்பு[தொகு]

அழகிய திருவாட்சியுடன், தேவியர் இரு புறமும் இருக்க, நரம்பும், நகக்கண்களுடன் நகமும் தெரியும் அளவு சிறப்பான சிற்பாக மூலவர் உள்ளார். 12 கரங்களுடன் இடது காலை மடித்து, வலது கால் தொங்கவைத்துக் கொண்டு பாம்பினைக் கவ்விய மயில் தன் இரு காலில் நிற்கின்ற நிலையில் காணப்படுகிறார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளியிணைப்புகள்[தொகு]