பொய் கொலைத் திமிங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sarcopterygii
பொய் கொலைத் திமிங்கிலம்
புதைப்படிவ காலம்:Middle Pleistocene–Recent[1]
False killer whale 890002.jpg
False killer whale size.svg
Size compared to an average human
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: இரட்டைப்
படைக்குளம்பி
உள்வரிசை: கடற்பாலூட்டி
குடும்பம்: Oceanic dolphin
பேரினம்: Pseudorca
இனம்: P. crassidens
இருசொற் பெயரீடு
Pseudorca crassidens
(Owen, 1846)
Cetacea range map False Killer Whale.svg
      Range of the false killer whale
வேறு பெயர்கள் [3]
1946 இல் அர்ஜென்டினாவில் ஒதுங்கிய இத்திமிங்கலங்கள்
குதிக்கும் இத்திமிங்கலம்

பொய் கொலைத் திமிங்கலம் (false killer whale , Pseudorca crassidens) என்பது கடல்சார் டால்பின் ஆகும். இது உலகளவில் பெருங்கடல்களில் வாழ்கிறது. ஆனால் முக்கியமாக வெப்பமண்டல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது முதன்முதலில் 1846 ஆம் ஆண்டில் ஒரு மண்டை ஓட்டின் அடிப்படையிலான போர்போயிஸ் இனமாக விவரிக்கப்பட்டது, இது 1861 ஆம் ஆண்டில் முதல் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. "பொய்யான கொலையாளி திமிங்கலம்" என்ற பெயரானது, இதே போன்ற மண்டை ஓட்டு பண்புகளிலிருந்து,[4] கொலைத் திமிங்கலத்தில் இருந்து (Orcinus orca)இப்பெயர் வந்தது.[5]

வாழிடம்[தொகு]

இந்த திமிங்கலங்கள், வெப்பமண்டல, மித வெப்பமண்டல கடல் நீரில் பரவலாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த இனங்கள் மிதமான வெப்ப நீரில் அதிகம் காணப்படுகின்றன. சிலநேரங்களில், சூடான நீர்நிலைகளிலும் வாழும் இயல்புடையன என்பதற்கானப் பதிவுகளும் உளளதாகத் தெரிகிறது. இவைப் பொதுவாக, 50 ° N ஐ தாண்டி, 50 ° S க்கு இடையில் வாழ்கின்றன. இது பொதுவாக திறந்த பெருங்கடல்களிலும் ஆழமான நீர் பகுதிகளிலும் வசிக்கின்றன. இருப்பினும், இது கடல் தீவுகளுக்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதிகம் வாழலாம்.

இந்த திமிங்கிலங்கள், உலகம் முழுவதும் வாழும் இயல்புடையதாகத் தெரிகிறது. இருப்பினும் மொத்த கணக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. கிழக்கு பசிபிக் கடற்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. சீனா, சப்பானுக்கு அருகில் 16,000 எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது. அவாய் தீவினைச் சுற்றி, இதன் எண்ணிக்கைக் குறைந்து வருகிறது.

வளர் இயல்பு[தொகு]

திமிங்கலம் அதிகபட்சமாக 6 மீ (20 அடி) நீளத்தை அடைகிறது. பிறந்த குட்டியானது, 1-2 மீட்டர் நீளம் இருக்கும்.[2][6] இருப்பினும் உலகம் முழுவதும் இந்த அளவு மாறுபட்டு உள்ளது. இது மிகவும் நேசமானதாகும். இது 500 உறுப்பினர்களைக் கொண்ட, தொகுதிகளை உருவாக்குவதாக அறியப்படுகிறது. மேலும் பாட்டில்நோஸ் டால்பின்கள் (Tursiops truncatus) போன்ற பிற டால்பின் இனங்களுடனும், இணைந்து வாழும் இயல்புடையன. மேலும், இது மற்ற உயிரினங்களுடன் நெருக்கமான பிணைப்புகளை உருவாக்கி வாழலாம். அத்துடன் அவர்களுடன் பாலியல் (பாலின மற்றும் ஓரினச்சேர்க்கை உட்பட) தொடர்புகளில் பங்கேற்கலாம். மாறாக, இந்த திமிங்கலம், மற்ற டால்பின்களுக்கு உணவளிப்பதாக அறியப்படுகிறது. இருப்பினும் இது பொதுவாக ஸ்க்விட் மற்றும் மீன்களை உண்ணுகிறது. இது ஒரு ஆழமான நீர்பகுதிக்குள் செல்லும், டால்பின் வகை ஆகும், அதிகபட்சமாக 927.5 மீ (3,043 அடி) ஆழம் வரை செல்வதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது; இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 29 கிமீ / மணி (18 மைல்) ஆகும்.

இந்த திமிங்கலம் 8 முதல் 14 வயது வரை உடல் முதிர்ச்சியை அடைகிறது. அதிகபட்சமாக ஆண்கள் 57 ஆண்டுகளும், பெண்கள் 62 ஆண்டும் உயிர் வாழ்கின்றன. பாலியல் முதிர்ச்சி 8 முதல் 11 வயது வரை நடக்கிறது. தனது வாழ்நாளில், 7 ஆண்டு இடைவெளியில் குட்டியினை ஈன்று வளர்க்கின்றன. இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும், எம்மாதத்திலும் ஏற்படலாம். இருப்பினும், இவைப் பொதுவாக குளிர்காலத்தின் பிற்பகுதியில், குட்டிகளை ஈனுகின்றன. கர்ப்ப காலம் 15 மாதங்கள் ஆகும். பெண் திமிங்கலங்கள், 9 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை பாலூட்டுகின்றன. குட்டிகளை வழிநடத்தும் திமிங்கலங்கள், பெண் திமிங்கலங்கள் ஆகும். இவை மாதவிடாய் நின்ற பிறகு, இனப்பெருக்கத்திற்குப் பிந்தைய கணிசமான ஆயுட்காலம் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளன. இவைகள் 45 முதல் 55 வயது வரை வாழ்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Pseudorca crassidens at fossilworks.org (retrieved 11 August 2018)
  2. 2.0 2.1 Baird, R. W. (2018). "Pseudorca crassidens". IUCN Red List of Threatened Species 2018. https://www.iucnredlist.org/details/18596/0. பார்த்த நாள்: 18 December 2018. 
  3. Perrin WF (ed.). "Pseudorca crassidens". World Cetacea Database. World Register of Marine Species. 4 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Richard Owen (1846). A history of British fossil mammals and birds. J. Van Voorst. பக். 516–520. https://archive.org/stream/historyofbritish00owen#page/516. 
  5. https://www.whalefacts.org/killer-whale-facts/
  6. "False killer whale (Pseudorca crassidens)". Marine Species Identification Portal. 30 ஜூன் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 January 2013 அன்று பார்க்கப்பட்டது.