பொய்க் குடலடைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொய்க் குடலடைப்பு[தொகு]

சிறுகுடலின் எந்தப் பகுதியும் இந்நிலையால் பாதிக்கப்படலாம். இதனை அசைவற்ற குடல் எனக் கொள்ள வேண்டும். குடலின் ஒரு பகுதியின் தசைச்சுவர் செயலிழந்து போவதால், எவ்வித அசைவும் இருப்பதில்லை.

குடல் இணைச் சவ்வுகளின் தமனி அடைப்பால், அந்தப் பகுதியிலுள்ள சிறுகுடலுக்கு குருதி செல்வதில்லை. ஆகவே அப்பகுதி சிதைந்துவிடுகிறது. வயிற்றின் மீது நிகழும் அறுவையிலோ, காயங்களாலோ இந்நிலை ஏற்படலாம். இதற்கு அறுவை தேவைப்படாது. சிரைவழி நீர்மங்கள் செலுத்தி, அதன் கார, அமில நிலை யைச் சீராக வைத்திருப்பதால் பொதுவாக நோய் சீரடைந்துவிடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்க்_குடலடைப்பு&oldid=3597533" இலிருந்து மீள்விக்கப்பட்டது