பொய்கை அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொய்கை அணை
அதிகாரபூர்வ பெயர்பொய்கை அணை
நாடுஇந்தியா
அமைவிடம்ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று8°16′11″N 77°30′29″E / 8.26972°N 77.50806°E / 8.26972; 77.50806ஆள்கூறுகள்: 8°16′11″N 77°30′29″E / 8.26972°N 77.50806°E / 8.26972; 77.50806
திறந்தது2000
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதார அமைப்பு

பொய்கை அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் ஒன்றாகும். ஆரல்வாய்மொழிக்கருகிலுள்ள செண்பகராமன்புதூர் பகுதியில் மலையோரமாக அமைந்துள்ள இவ்வணை பொய்கையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அணையின் கட்டுமானப் பணிகள் 2000-வது ஆண்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.[1][2] இவ்வணையின் முழு கொள்ளளவு 44.65 அடி. குமரி மாவட்டம் கடுக்கரைக்கு மேலமைந்த காட்டுப்பகுதியிலுள்ள இரப்பையாறு மற்றும் சுங்கான் ஓடை இரண்டும் இவ்வணையின் நீராதாரங்களாகும்[2].

அமைப்பு[தொகு]

இவ்வணையிலிருந்து நீரைத் திறந்துவிடுவதற்கு ஆற்று மதகும், வாய்க்கால் மதகும் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்று மதகு மூலம் கரும்பாட்டு குளம், கிருஷ்ணன் குளம், பொய்கை குளம், குட்டி குளம், செண்பகராமன் பெரியகுளம், தோவாளை பெரிய குளம், வைகை குளம், ஆரல்வாய்மொழி பெரிய குளம் ஆகிய 8 குளங்கள் ஆற்று மதகு மூலமும் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த லெட்சுமி புதுகுளம், அனுவத்தி குளம், அத்தி குளம் மற்றும் இராதாபுரம் வட்டத்துகுட்பட்ட சாலை புதுக்குளம், தெற்கு சிவகங்கை குளம், மேல பாலார் குளம், கீழ பாலார் குளம், பழவூர் பெரிய குளம் ஆகியவை வாய்க்கால் மதகு மூலமும் பாசனவசதி பெறுகின்றன[2]. இக்குளங்களின் மூலமாக 1357 ஏக்கர் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுமென 1992 இல் கணக்கிடப்பட்டது.[2]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்கை_அணை&oldid=2374314" இருந்து மீள்விக்கப்பட்டது