உள்ளடக்கத்துக்குச் செல்

பொய்கையில் யோகன்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொய்கையில் சிறீகுமார குருதேவன்
பிறப்புகுமாரன்
(1879-02-17)17 பெப்ரவரி 1879
இரவிபேரூர், திருவிதாங்கூர், தற்போதைய பத்தனம்திட்டா மாவட்டம், கேரளம், இந்தியா
இறப்பு29 சூன் 1939(1939-06-29) (அகவை 60)
தொழில்
தேசியம் இந்தியா
வகை
துணைவர்வி. ஜானம்மாள் (அம்மச்சி)

பொய்கையில் யோகன்னன் (Poykayil Yohannan)[a], (17 பிப்ரவரி 1879 - 29 ஜூன் 1939), பொய்கையில் சிறீ குமார குருதேவன் அல்லது பொய்கையில் அப்பச்சன் எனவும் அறியப்படும் இவர் ஒரு ஆன்மீகத் தலைவரும், கவிஞரும், தலித் விடுதலையாளரும், மறுமலர்ச்சித் தலைவரும் மற்றும் பிரத்யக்சா ரக்சா தெய்வ சபையின் (கடவுளின் வெளிப்படையான இரட்சிப்பின் சமூகம்) நிறுவனரும் ஆவார். கேரளாவின் ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஆன்மீக விடுதலை மற்றும் சமூக மேம்பாட்டிற்காக இவர் பணியாற்றினார்.[1] [2] [3]

இளமை கால வாழ்க்கை

[தொகு]

மத்திய திருவிதாங்கூரில் (இப்போது கேரளா ) திருவல்லாவுக்கு அருகிலுள்ள இரவிபேரூரில் பிப்ரவரி 17, 1879 அன்று பிறந்த பொய்கையில் அப்பச்சன், உயர்சாதி இந்துக்கள் மற்றும் சிரிய கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்த ஒரு பகுதியில் வளர்ந்தார். இது ஒடுக்கப்பட்ட சமூகங்களை ஒழுங்கமைத்து மேம்படுத்துவதில் அவரது பிற்கால முயற்சிகளுக்கு வழிவகுத்தது.[4] இவரது பெற்றோர் கிறிஸ்தவக் குடும்பங்களில் அடிமைத் தொழிலாளர்களாக இருந்தனர். இவரது பெற்றோர் இவருக்கு குமாரன் என்று பெயரிட்டனர். பிற்காலத்தில் இவர் தனது பெயரை யோகன்னன் (ஜான் என்பதற்கான மலையாள வார்த்தை) என்று மாற்றிக்கொண்டார். அடிமையின் குழந்தையாக இருந்ததால் அவரது பெற்றோரால் அவருக்கு முறையான கல்வியை வழங்க முடியவில்லை, ஆயினும் பள்ளிகளில் படித்த தனது சுற்றுப்புறக் குழந்தைகளிடமிருந்து எழுத்துக்கள் மற்றும் சொற்களைக் கற்றுக்கொண்டார்.

கல்வியைக் கற்ற பின்னர், சக சாதியினரிடையே சமத்துவம் மற்றும் நீதியைப் பரப்பினார். விலக்கப்பட்டவர்களிடையே இரட்சிப்பு மற்றும் விடுதலையின் வார்த்தையைப் பரப்புவதற்கு இவர் கிறிஸ்தவ முகப்பை மூக்கிய கருவியாகப் பயன்படுத்தினார். திருச்சபையின் போதனைகளின் அடிப்படைகளையே பகுத்தறிவுடன் விமர்சித்து, விவிலியத்தை எரித்ததன் மூலம், தலித் கிறிஸ்தவ அடையாளத்தின் போக்கை மாற்றினார்.[5]

மதப் பணிகள்

[தொகு]

சிரிய கிறிஸ்தவர்களிடையே சீர்திருத்தவாதப் பிரிவான மார்த்தோமா தேவாலயத்தில் யோகன்னன் சேர்ந்தார். ஆனால் அந்த தேவாலயம் தலித்துகளை ஒரு தாழ்ந்த வகுப்பினராக நடத்துவதை உணர்ந்து, அதை விட்டு வெளியேறினார். பின்னர் பிரதரன் மிஷன் என்ற புதிய பிரிவில் சேர்ந்தார். அங்கும் இதேபோன்ற சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை எதிர்கொண்டார். இந்திய கிறிஸ்தவச் சமூகங்கள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும், இது கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகவும் யோகன்னன் முடிவு செய்தார்.[6]

1909 இல், கிறிஸ்தவத்தை விட்டு வெளியேறி, ‘பிரத்யக்ச ரக்சா தெய்வ சபை ’ என்ற பெயரில் தனது சொந்த மத எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கினார். யோகன்னன் ஆன்மீக விடுதலையை ஆதரித்தார். மேலும் தலித்துகளுக்கு அதிகாரம் அளித்து ஒருங்கிணைக்க முயன்றார். "தலித் சாதிகள்" பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையையும் ஊக்குவித்தார். [7] 

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

அப்பச்சன், 1921 மற்றும் 1931 ஆம் ஆண்டுகளில், திருவிதாங்கூர் இராச்சியத்தின் சட்டமன்றக் குழுவான சிறீ மூலம் பிரபல சட்டசபைக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.[8]

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]
  • வி.வி.சாந்தகுமார் எழுதிய ‘மன்னிக்கலே மாணிக்கம்’ என்ற நாடகம் அப்பச்சனின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.[9]
  • பிரசோப் திவாகரன் இயக்கிய ரூபகம் (உருவகம்) என்ற ஆவணப் படமும் பொய்கையில் அப்பச்சனின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளைக் காட்டுகிறது. இந்த படம் 12வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவின் போகஸ் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[10]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Literal English translations;
    • Poykayil Sree Kumara Gurudevan – The revered young spiritual teacher (Guru) from Poykayil.
    • Poykayil Appachan – The respected father from Poykayil.
    • Poykayil Yohannan – John from Poykayil (Yohannan is the Malayalam equivalent of John).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Philip, A. T. (1991). The Mar Thoma Church and Kerala Society (in ஆங்கிலம்). Juhanon Mar Thoma Study Centre. p. 96. One of the outcome was the booklet entitled Poikayil Yohannanum Veda vaipareethyavum (Poikayil Yohannan and antitheology). Yohannan is addressed as ' Appachan' by his followers.
  2. Raj, Anandu (2024-02-17). "Poykayil Appachan : The Emancipator Of The Oppressed". Outlook India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-17.
  3. V V, ABHILASH (2024-03-03). "Legacy of Poykayil Appachan is still a beacon of hope". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-02-17.
  4. Sekher, Dr Ajay S. (2018-02-18). "Poykayil Appachan, practitioner of critique and co-option | Poykayil Appachan, practitioner of critique and co-option". www.deccanchronicle.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-17.
  5. Sekher, Ajay S. (2019). "The Politics of Spirituality: Dissident Spiritual Practice of Poykayil Appachan and the Shared Legacy of Kerala Renaissance". Practical Spirituality and Human Development (Palgrave Macmillan, Singapore): 279. doi:10.1007/978-981-13-3687-4_16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-13-3686-7. https://doi.org/10.1007/978-981-13-3687-4_16. பார்த்த நாள்: 18 February 2025. 
  6. J. W. Gladstone (1984). Protestant Christianity and people's movements in Kerala: a study of Christian mass movements in relation to neo-Hindu socio-religious movements in Kerala, 1850-1936. Seminary Publications. Retrieved 30 March 2012.
  7. Poikayil Johannan பரணிடப்பட்டது 1 மே 2012 at the வந்தவழி இயந்திரம்
  8. Dr. Alex Thomas; I.S.P.C.K. (Organization) (1 August 2007). A history of the first cross-cultural mission of the Mar Thoma Church, 1910-2000. ISPCK. ISBN 978-81-7214-969-7. Retrieved 30 March 2012.
  9. "Poikayil Yohannan: Leaders of Kerala Renaissance". PSC Arivukal (in Indian English). 2020-07-01. Retrieved 2025-02-17.
  10. Simon, Steni (2019-06-24). "An ode to a Dalit icon". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-02-17.

நூல் ஆதாரப்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Unknown Subjects: Songs of Poykayil Appachan. Translated from Malayalam by A.S. Sekher
  • Vadyakhoshangal Nadathunnavarum and Ente Vamshathepatti were featured in the Dalit Poem Collection named Kathal — published by DC Books
  • Poikayil Appachan's biography translated from Malayalam by Deepthy Krishna
  • Mohan, P. Sanal (2013). "Religion, Social Space, and Identity: The Prathyaksha Raksha Daiva Sabha and the Making of Cultural Boundaries in Twentieth Century Kerala". In Channa, Subhadra Mitra; Mencher, Joan P. (eds.). Life as a Dalit: Views from the Bottom on Caste in India. SAGE Publications India. ISBN 978-8-13211-777-3.
  • V. V. Swamy and E. V. Anil, "Prathyaksha Raksha Daiva Sabha - Orma, Pattu, Charithrarekhakal", Adiyardeepam Publications, 2010
  • 'Vyavastayude Nadapathakal', Society of PRDS Studies, Unseen letters, Slate Publications, 2017
  • Raj,Anandu. “അനുയായികൾക്ക് ലഭിച്ച ഉറപ്പിൽ നിന്നാണ് അപ്പച്ചൻ ‌ദൈവമാകുന്നത്.” Keraleeyam Online, Feb. 2023. https://www.keraleeyammasika.com/poyikayil-appachan-kerala-dalit-prds-renaissance/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொய்கையில்_யோகன்னன்&oldid=4293895" இலிருந்து மீள்விக்கப்பட்டது