பொம்மை நூலகம்
பொம்மை நூலகம் (Toy library) பொம்மைகள், புதிர்கள் மற்றும் சில விளையாட்டுகளை வாடகைக்குக் கொடுக்கிறது. ஒரு வாடகைக் கடையாகவோ அல்லது குடும்ப வளத் திட்டத்தின் வடிவமாகவோ இந்நூலகம் செயல்படுகிறது. பொம்மை நூலகங்கள் குடும்பங்களுக்கான விளையாட்டு அமர்வுகள் மற்றும் வெவ்வேறு நிலைகளில் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்குப் பொருத்தமான பல வகையான பொம்மைகளை வழங்குகின்றன. பொம்மை நூலகங்கள் ஒவ்வொரு வாரமும் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு புதிய பொம்மைகளை வழங்குகின்றன. பெற்றோரின் பணத்தை மிச்சப்படுத்துகின்றன. குழந்தைகளை சலிப்படையாமல் வைத்திருக்கின்றன. பிரெஞ்சு மொழி பேசும் நாட்டில் இப்பொம்மை நூலகங்கள் பிரபலமாக உள்ளன. அங்கு பொம்மை நூலகங்கள் லூடோதிக்கியூசு என்று அழைக்கப்படுகின்றன.
வரலாறு
[தொகு]லாசு ஏஞ்சல்சு நகரத்தில் ஒரு பொம்மை நூலகம் நிறுவப்பட்டதன் மூலம், பொம்மை நூலகங்கள் குறைந்தது 1935 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின்றன. 1960 ஆம் ஆண்டுகள் மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் எட் இசுட்டார்ட்டு எனப்படும் குழந்தைக் கல்வி திட்டம் மற்றும் பிற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்த சிந்தனை மீண்டும் வெளிப்பட்டு பிரபலமடைந்தது.[1]
இலெக்கோடெக் என்பது சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளின் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தும் ஒரு பொம்மை மற்றும் விளையாட்டு நூலகம் ஆகும். தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு, உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்நேர பொம்மைகள் மற்றும் விளையாட்டு நூலகங்கள் வருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Moore, Julia E. (1995). "A History of Toy Lending Libraries in the United States Since 1935". Kent State University master's thesis. பார்க்கப்பட்ட நாள் 23 May 2010.