உள்ளடக்கத்துக்குச் செல்

பொம்மிடி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொம்மிடி தொடருந்து நிலையம் (Bommidi Railway Station, நிலையக் குறியீடு:BQI) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயால் நிருவகிக்கப்படுகிறது.

இருப்பிடம்

[தொகு]

இந்த நிலையமானது சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் - ஜோலார்பேட்டை சந்திப்பு தொடருந்து நிலையம் வழித்தடத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

பொம்மிடி தொடருந்து நிலையமானது 1867 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அருகில் உள்ள ஏற்காடு மலையில் விளையும் காப்பி, மிளகு, மரங்கள் போன்ற வேளாண் பொருட்களை நாட்டின் பிற இடங்களுக்கு கொண்டு செல்ல இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டது.

திட்டங்களும் மேம்பாடும்

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். ஒன்றிய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பொம்மிடி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7]

2026 மார்ச் முதல் நாள், பிரதமர் நரேந்திர மோதி, அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பொம்மிடி தொடருந்து நிலைய பணிகளை நாட்டிற்கு அர்பணித்துவைத்தார்.[8][9][10][11][12].

  • மேம்படுத்தப்பட்ட முகப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட நுழைவாயில்களுடன் மேம்படுத்தப்பட்ட நிலையக் கட்டிடம்.
  • நடைமேம்பாலங்கள் மற்றும் உயர்த்தியானது பாதுகாப்பான மற்றும் வசதியான அணுகலை நடைமேடைகளுக்கிடையே எளிதாக்குகின்றன.
  • பயணிகள் மற்றும் வாகனங்களின் சீரான இயக்கத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட சுற்றும் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள்
  • பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த நவீனமயமாக்கப்பட்ட நடைமேடைகள் மற்றும் நடைமேடை கூரைகள்[13]

வசதிகள்

[தொகு]
  • வாகனங்கள் நிறுத்துமிடம்
  • குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்போர் கூடம்
  • வண்டிகள் குறித்த எண்ணியல் தகவல் பலகை
  • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
  • நடைமேடையைக் கடக்க மின்தூக்கி வசதி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  2. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  3. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  4. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  5. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  6. https://www.youtube.com/watch?v=nh003oifc3o
  7. "புதுப்பொலிவுடன் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பொம்மிடி ரயில் நிலையம்: ரயில் பயணிகள் மகிழ்ச்சி". Kamadenu (in ஆங்கிலம்). 2025-03-03. Retrieved 2025-03-04.
  8. https://www.pmindia.gov.in/en/news_updates/pm-to-visit-tamil-nadu-and-puducherry-on-1st-march/
  9. https://ddnews.gov.in/en/pm-modi-to-visit-tamil-nadu-puducherry-on-march-1-to-launch-projects-worth-over-rs-7100-crore/
  10. https://x.com/ANI/status/2027344034021486803
  11. https://www.hindutamil.in/news/india/pm-narendra-modi-to-visit-tamil-nadu-and-puducherry-on-1st-march
  12. https://www.youtube.com/watch?v=OwZgxa5i2TQ
  13. https://www.facebook.com/photo?fbid=1339766588183911&set=a.354810720012841