பொம்மலாட்டம் (1968 திரைப்படம்)
Appearance
பொம்மலாட்டம் | |
---|---|
இயக்கம் | வி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | மே 31, 1968 |
நீளம் | 4529 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொம்மலாட்டம் (Bommalattam (1968 film)) 1968 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,[2] ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசையமைக்க, வாலி, ஆலங்குடி சோமு, நா. பாண்டுரங்கன் மற்றும் அவினாசி மணி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.[3] கல்கி இதழ் நேர்மறையான விமர்சனங்களைக் கொடுத்து பாராட்டினாலும் படத்தின் தலைப்பு கதைக்கு சம்பந்தம் இல்லை என்று விமர்சித்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
- ↑ Narayanan, Sujatha (7 December 2016). "Timeless...cho". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 21 September 2021. பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
- ↑ "Bommalaattam". Gaana. Archived from the original on 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
- ↑ "பொம்மலாட்டம்". கல்கி. 23 June 1968. p. 41. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.