பொமல்ஹோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொமல்கோட் விண்மீனைச் சுற்றும் பொமல்ஹோட் b என்ற கோள்
(ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி ஊடாக எடுக்கப்பட்ட நாசாவின் படம்)

பொமல்ஹோட் (Fomalhaut) என்பது பீசிஸ் ஆஸ்ட்ரினஸ் என்ற விண்மீன் மண்டலத்தில் உள்ள ஒளிச்செறிவு கூடிய விண்மீன் ஆகும். இதன் பெயருக்கு அரபு மொழியில் திமிங்கிலத்தின் வாய் என்று பொருள். இது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 25 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.

வயது[தொகு]

பொமல்ஹோட் ஓர் இளம் விண்மீனாகக் கருதப்படுகிறது. இதன் வயது கிட்டத்தட்ட 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இதன் வாழ்வுக்காலம் ஒரு பில்லியன் ஆண்டுகள் மட்டுமே. இதன் மேற்பரப்பின் வெப்பநிலை 8,500 K (14,840 °F/8,230 °C). சூரியனுடன் ஒப்பிடும்போது இதன் திணிவு 2.3 மடங்கும், ஒளிர்வு 15 மடங்கும், விட்டம் 1.7 மடங்கும் ஆகும்.

தொகுதி[தொகு]

2008, நவம்பர் 13 இல் இதனைச் சுற்றி வரும் கோள் ஒன்றைத் தாம் அவதானித்ததாக வானியலாளர்கள் அறிவித்தனர்[1]. பொமல்ஹோட் பி என்ற இக்கோளின் திணிவு வியாழனை விட மூன்று மடங்கு பெரியதும்[2], குறைந்தது நெப்டியூனின் திணிவை ஒத்ததும் ஆகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொமல்ஹோட்&oldid=3223024" இருந்து மீள்விக்கப்பட்டது