பொப்பிலி கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொப்பிலி கோட்டை (Bobbili Fort) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் விசயநகர மாவட்டத்தில் அமைந்துள்ள 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பொப்பிலியில் கட்டப்பட்ட ஓர் கோட்டையாகும். 1757 ஆம் ஆண்டில் பொப்பிலி போரின்போது பொப்பிலி அரசர்களுக்கும் அண்டை நாடான விசயநகரத்தின் மன்னருக்கும் இடையிலான சண்டையில் அழிக்கப்பட்ட அதே பெயரின் அருகிலுள்ள மண் கோட்டையுடன் இது ஒரு வரலாற்று இணைப்பைக் கொண்டுள்ளது.

சிறுவயதில் பொப்பிலி போரில் இருந்து தப்பிய சின்னா இரங்காராவ், பிற்காலத்தில், பொப்பிலியின் அரசனாக பதவியேற்றார். அவரது பரம்பரையின் வாரிசுகள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேம்பட்ட பொருளாதார நிலைமைகள் மேபட்டதைத் தொடர்ந்து தற்போதைய பொப்பிலி கோட்டையை கட்டினர்.

தற்போதுள்ள கோட்டை 10 ஏக்கர் (4.0 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவரது வாரிசுகளால் மேம்படுத்தப்பட்ட தனது இராச்சியத்தை மீண்டும் பெற்றபின் சின்னா இரங்காராவ் அவர்களால் கட்டப்பட்டது. இந்த கோட்டை வளாகத்தில் இந்தோ சரசனிக் கட்டடக்கலை பாணியில் உயர்ந்த குவிமாடம் மற்றும் பல மண்டபங்கள், தர்பார் மண்டபம், நான்கு பெரிய அரண்மனைகள் மற்றும் இரண்டு கோயில்கள் உள்ளன.

இருப்பிடம்[தொகு]

பொப்பிலி விசயநகரத்திலிருந்து 55 கிலோமீட்டர் (34 மைல்) தொலைவில் உள்ளது. இது இரயில் மற்றும் சாலை இணைப்புகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இராய்ப்பூர்-விசயநகரம் ரயில் பாதையில் உள்ள ஒரு முக்கிய இரயில் சந்திப்பான விசயநகரம் அருகிலுள்ள இரயில் நிலையம் ஆகும். வேதவதி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் உள்ளது. இது இப்பகுதிக்கு அணுகலை வழங்குகிறது. [1]

வரலாறு[தொகு]

ஆரம்பகால வரலாறு[தொகு]

1652 ஆம் ஆண்டிலிருந்து பொப்பிலியின் வரலாற்றைக் காணலாம். நிசாமின் கீழ் சிறீகாகுளத்தின் நவாபின் பௌஜ்தார் ஷெர் முகம்மது கான் விசயநகர மாவட்டத்திற்கு வந்தபோது. அவருடன் வெங்கடகிரியின் அரசரின் 15 வது வாரிசான வேலாமா சமூகத்தைச் சேர்ந்தவரும், பொப்பிலி அரசரின் மூதாதையருமான பெத்தராயடு மற்றும் போட்டியாளர்களாக இருந்த விஜயநாகிராம் குடும்பத்தின் மூதாதையரான பசுபதி மாதவ வர்மா ஆகியோர் அவருடன் வந்தனர். [2] ஒரு பதிப்பில் நவாப், பெத்தராயடு வழங்கிய மகத்தான சேவைகளில் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு நில உடைமைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. பெத்தராயடு பின்னர் ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு "பொப்பிலி" என்று பெயரிட்டார் எனவும் கூறப்படுகிறது. அதாவது "அரச புலி" என்று பொருள்படும். நவாபின் நற்பண்புக்கான பாராட்டுக்கான அடையாளமாக, "ஷெர்" ('ஷெர்' என்றால் இந்தி மொழியில் "புலி" ). [2]

மற்றொரு பதிப்பில், இராயுடுவின் மகன் இலிங்கப்பா பொப்பிலியை தனது தலைநகராகத் தேர்ந்தெடுத்து, ஒரு கோட்டையைக் கட்டி, அங்கு ஒரு நகரத்தை நிறுவி, அதற்கு "பெத்த-புலி" என்று பெயரிட்டார் (தெலுங்கு மொழியில் "பெரிய புலி" என்று பொருள்); இந்த பெயர் இறுதியில் பெபூலி என்று மாற்றப்பட்டது, இறுதியாக பொப்பிலி ஆனது. இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்ட ஷெர் கானின் மகனை இலிங்கப்பா மீட்டதை பாராட்டும் விதமாக, ஷெர் கான் இலிங்கப்பாவுக்கு 12 கிராமங்களை பரிசளித்து அவருக்கு "இரங்காராவ்" என்ற பட்டத்தை வழங்கினார். இலிங்கப்பாவுக்குப் பிறகு அவரது வளர்ப்பு மகன் வெங்கல் இரங்காராவ், அவரது மகன் இரங்கபதி, அவரது மகன் இராயதப்பா ஆகியோர் பதவிக்கு வந்தனர். இராயதப்பாவின் வளர்ப்பு மகன் கோபாலகிருஷ்ணன் தனது தந்தையிடமிருந்து ஆட்சியை எடுத்துக் கொண்டார். [3] பழைய கோட்டையைக் கட்டும் நேரத்தில் ஒரு முஸ்லீம் துறவி பொப்பிலி குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அரச சகோதரர்களை அவர்கள் கோட்டையைக் கட்டத் தேர்ந்தெடுத்த இடம் துரதிர்ஷ்டவசமானது என எச்சரித்ததாகவும், ஆனால் அவர்கள் இந்த எச்சரிக்கையை புறக்கணித்ததாகவும் தெரிகிறது. [4]

1753 இல் கோபாலகிருட்டிணனின் ஆட்சியின் போது, ஐதராபாத்தின் நிசாம் பிரெஞ்சுக்காரர்களுக்கு வடக்கு சர்க்கார் மாவட்டங்களை வழங்கினார். அப்போதைய பிரெஞ்சுத் தளபதி சார்லசு புசி சிறீகாகுளம் மற்றும் ராஜமன்றி வட்டங்களை விஜயநகரத்தின் மகாராஜாவான பெத்த விஜியராம இராஜுக்கு குத்தகைக்கு வழங்கினார். இதனால் தளபதி புசி மற்றும் நிசாம் இடையேயான உறவுகள் முறிந்தன. [5]

அம்சங்கள்[தொகு]

தற்போதுள்ள கோட்டை 10 ஏக்கர் (4.0 ஹெக்டேர்) பரப்பளவில் உள்ளது. ஐதராபாத்தில் நாடுகடத்தப்பட்ட காலத்தில் இரங்காராவும் அவரது மகனும் இந்த பாணியை விரும்பியிருக்கலாம் என்பதால், இந்தோ-சரசனிக் கட்டடக்கலை பாணியில் இது கட்டப்பட்டது. சின்னா இரங்கராவ் பிரதான அரண்மனையின் மிகப் பழமையான பகுதியை அதன் சரசெனிக் வளைவுகளின் முதல் கட்டத்தை ஆதரித்தார். [6] இருப்பினும், 1861 ஆம் ஆண்டில் புனித சோர்சு பிரித்தன் அரசாங்கத்திற்கு சமர்ப்பித்த அறிக்கையில், பொப்பிலியில் உள்ள கல் கோட்டைக்கு போதுமான பாதுகாப்பு திறன் இல்லை என்று கூறப்பட்டது. [7]

கோட்டையின் முகப்பில் ஒரு அரண்மனையின் நேர்த்தியானது, அதன் கோட்டையை விட, 20 அடி (6.1 மீ) உயரமுள்ள, உயரமான சுவர்களைக் கொண்டுள்ளது. அரச குடும்பம் இந்த கோட்டையில் வசித்து வந்துள்ளது. கோட்டையின் வடகிழக்கு நுழைவு ஒரு உயரமான குவிமாடம் கொண்ட அமைப்பைக் கொண்டுள்ளது. முழு அரண்மனை வளாகமும் ஒரே பகுதியாக உள்ளது. [8]

கோட்டை பகுதிக்குள், தர்பார் மண்டபம், இளவரசனின் அரண்மனை, விருந்தினர்களுக்கான அரண்மனை, மற்றும், மூன்று தளங்களைக் கொண்ட மிகப்பெரிய அரச குடும்ப உறுப்பினர்கள் வசிக்கும் அரசரின் அரண்மனை ஆகிய நான்கு பெரிய நினைவுச்சின்னங்கள் உள்ளன. தர்பார் மண்டபம், அல்லது பிரதான கூட்ட அரங்கம் என்பது, மன்னர்கள் தங்கள் முடிசூட்டு விழாக்களை நடத்தியுள்ள்னர். இது 6,000 சதுர அடி (560 மீ 2) பரப்பளவைக் கொண்டுள்ளது, மேலும் ஒரு அருங்காட்சியகம் மற்றும் குடும்ப அலுவலகங்களும் உள்ளன

கோட்டை வளாகத்திற்குள், இரண்டு கோயில்கள் உள்ளன: குடும்ப தெய்வமான வேணுகோபால சுவாமி கோயில் இது பொப்பிலி நிறுவப்பட்ட நேரத்தில் கட்டப்பட்டது; மற்றொன்று சின்னா இரங்காராவ் போருக்குப் பின்னர், தனது நிலப்பரப்பை மீட்டெடுத்த பிறகு எழுப்பினார். இந்த கோவிலின் கோபுரம் அல்லது நுழைவாயில் 1851 இல் கட்டப்பட்டுள்ளது. ஒரு ஏரியின் மையத்தில் கட்டப்பட்ட மற்றொரு மண்டபம் வசந்த மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அங்கு உள்ளூர் நம்பிக்கையின் படி, வேணுகோபால சுவாமி தனது மனைவியுடன் ஒரு நாள் ஓய்வெடுக்கிறார். இதன் பின்னர், வேணுகோபால சுவாமியின் உருவம் ஏரியின் கரையில் உள்ள மண்டபத்தில் ஒரு நாள் வைக்கப்பட்டு பின்னர் பிரதான சன்னதிக்கு கொண்டுசெல்லப்படுகிறது. இந்த மண்டபங்களை 1825 ஆம் ஆண்டில் மகாராஜா கிருட்டிணதாஸ் இரங்கராவ் கட்டினார். கோட்டையின் மற்றொரு செயல்பாட்டு அரண்மனை பூசை மகால் என்பதாகும். இந்த அரண்மனைக்கு எதிரே அரசனின் குடியிருப்பு உள்ளது. இது பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நேர்த்தியான "நாடா, ஓவியங்கள் மற்றும் பீங்கான்" ஆகியவற்றால் மிகவும் பாதுகாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. [1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Brief History Of Vizianagaram". Vizianagaram District Administration. 12 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 March 2016 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Vijay" defined multiple times with different content
  2. 2.0 2.1 Francis 2002.
  3. "Vizianagaram". aptourism.gov.in. Tourism Department of Government of Andhra Pradesh. 10 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. Handelman 2013.
  5. . 
  6. Francis 1992.
  7. Commons 1862.
  8. "Bobbili Fort through the years". Times of India. 24 December 2015. http://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Bobbili-Fort-through-the-years/articleshow/50307048.cms. பார்த்த நாள்: 9 March 2016. 

நூற்பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொப்பிலி_கோட்டை&oldid=3565566" இருந்து மீள்விக்கப்பட்டது