உள்ளடக்கத்துக்குச் செல்

பொபி பீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொபி பீல்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 20 436
ஓட்டங்கள் 427 12,191
மட்டையாட்ட சராசரி 14.72 19.44
100கள்/50கள் 0/3 7/48
அதியுயர் ஓட்டம் 83 210*
வீசிய பந்துகள் 5,216 88,721
வீழ்த்தல்கள் 101 1,775
பந்துவீச்சு சராசரி 16.98 16.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 123
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 33
சிறந்த பந்துவீச்சு 7/31 9/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/0 214/0
மூலம்: [1]

பொபி பீல் (Bobby Peel, பிறப்பு: பிப்ரவரி 12 1857, இறப்பு: ஆகத்து 12 1941), இங்கிலாந்து அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 427 ஓட்டங்களையும் 101 இழப்புகளையும் கைப்பற்றினார். 436 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு 12,191 ஓட்டங்களையும் 1,775 இழப்புகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் 1884 - 1896 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

1857 பிப்ரவரி 12 அன்று மோர்லிக்கு அருகில் உள்ள சுர்வெல் என்ற கிராமத்தில் பீல் பிறந்தார். [1] இவர் ஒரு சுரங்கத் தொழிலாளியின் மகன் ஆவார். பீல் சுரங்கங்களில் சில காலம் பணியாற்றினார். [2] 16 வயதிலிருந்தே, இவர் சுர்வெல் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார், [3] [4] மற்றும் 1882 ஆம் ஆண்டில் யார்க்ஷயர் கோல்ட்ஸின் ஒரு பகுதியாக இருந்தார். [5] அந்த நேரத்தில், எட்மண்ட் பீட் யார்க்ஷயர் அணியின் முதன்மையான இடது கை வழமைச் சுழல் பந்து வீச்சாளராக இருந்தார். இதனால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது சிக்கலானது. ஒரு போட்டியில் இவருக்கு காயம் ஏற்பட்டதனால் ஜூலை 10, 1882 இல் ஷெஃபீல்டில் சர்ரே துடுப்பாட்ட அணிக்கு எதிராக யார்க்ஷயர் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் தரத் துடுப்பாட்டத்தில் அவர் அறிமுகமானார். [1] அந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 83 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 9 இழப்புகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் தனது அறிமுகப் போட்டியில் ஐந்து இழப்புகளைக் கைப்பற்றினார். மேலும் அந்த ஆண்டின் இறுதியில் அணியின் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.[6]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

1884-85 குளிர்காலத்தில், ஆல்பிரட் ஷா, ஆர்தர் ஷ்ரூஸ்பரி மற்றும் ஜேம்ஸ் லில்லிவைட் ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த அணியில் பீல் சேர்க்கப்பட்டார். [7] இந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த அணி இங்கிலாந்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இல்லை. [8] 1884-85 இங்கிலாந்து அணியில், முந்தைய சுற்றுப்பயணங்களைப் போலவே, தொழில்முறை துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே இருந்தனர்; [9] 1884 இல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணியுடன் ஆத்திரேலிய அணி மோதலில் ஈடுபட்டது. [10] இவர் அதிக அளவிலான நிறைவுகளை வீச வேண்டியிருந்தது. மொத்தமாக இவர் 321 இழப்புகளைக் கைப்பற்றினார். சராசரியா இவர் 5 இழப்புகளைக் கைப்பற்றினார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இழப்புகளைக் கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பெற்றார். [11] [12]

இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, பீல் தனது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார் மற்றும் ஐந்து போட்டிகளிலும் விளையாடினார். [13] இவரது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி டிசம்பர் 12, 1884 இல் தொடங்கியது.முதல் ஆட்டப் பகுதியில் இவர் 8 இழப்புகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் , மழையால் பாதிக்கப்பட்ட ஆடுகளத்தில் 51 ஓட்டங்களுக்கு ஐந்து இழப்புகளை எடுத்தார். [14] [15] மீதமுள்ள ஆட்டங்களில் இவர் சிறப்பாகச் செயல்படவில்லை. [14] 21.47 எனும் சராசரியில் [16] 21 இழப்புகளைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 7.40 எனும் சராசரியோடு 37 ஓட்டங்கள் எடுத்தார். [17] 1886 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய அடுத்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை, [18] மேலும் ஆஸ்திரேலியாவின் அடுத்த இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தைத் தவறவிட்டார்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Hodgson, p. 57.
  2. Pearson, Ch. 1: "Intent to Murder: Workington", Location 356.
  3. "Bobby Peel: Great Yorkshire Cricketer". 
  4. Woodhouse, p. 74.
  5. "Player Oracle R Peel". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013.
  6. Hodgson, p. 45.
  7. "England in Australia, 1884–85". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1886. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013.
  8. Knox, p. 117.
  9. Knox, p. 144.
  10. Knox, pp. 144–58.
  11. "First-class Bowling in Each Season by Bobby Peel". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013.
  12. "England in Australia, 1884–85". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1886. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013.
  13. "Player Oracle R Peel". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013.
  14. 14.0 14.1 "Statistics: Statsguru: R Peel: Test matches (bowling analysis)". ESPNCricinfo. Archived from the original on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  15. "Australia v England 1884–85". Wisden Cricketers' Almanack. London: John Wisden & Co. 1886. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  16. "Test Bowling in Each Season by Bobby Peel". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  17. "Test Batting and Fielding in Each Season by Bobby Peel". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  18. "Statistics: Statsguru: Test matches: Team records (Matches played by England not involving R Peel 1884–1897)". ESPNCricinfo. Archived from the original on 2 March 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொபி_பீல்&oldid=2885244" இலிருந்து மீள்விக்கப்பட்டது