பொன். சுந்தரராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன். சுந்தரராசு (பிறப்பு: 1947) இவர் ஒரு சிங்கப்பூர் எழுத்தாளராவார். தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பின்பு சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து தனது கல்வியை வள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பித்தார். பின்னர் செயிண்ட் ஜார்ஜ்ஸ் தொடக்கப் பள்ளியில் தமது கல்வியைத் தொடர்ந்து உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் தனது கல்வியை முடித்துக்கொண்டார். பின்பு மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

ஆசிரியர். அத்துடன், சிங்கப்பூர் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் பகுதி நேர செய்தி வாசிப்பாளர்.

இலக்கியப் பணி[தொகு]

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என பல்துறைகளிலும் பங்களிப்பு அளித்துவரும் இவரின் கன்னியாக்கம் வேலைக்காரன் வேலாயுதன் எனும் தலைப்பில் 1963ல் பிரசுரமானது. அன்றிலிருந்து சுமார் 40 சிறுகதைகளையும், 50 வானொலி, தொலைக்காட்சி நாடகங்களையும், 7 ஆய்வுக் கட்டுரைகளையும், 20 வானொலிச் சிறுவர் கதைகளையும் திருமுகன் எனும் புனைப் பெயரில் எழுதியுள்ளார். இவரின் பல ஆக்கங்கள் வானொலி, தொலைக்காட்சிக்களில் ஒலி ஒளிபரப்பானதுடன், சிங்கப்பூர் மலேசிய பத்திரிகைளில் பிரசுரமாகியுமுள்ளன. மேலும் இவர் சிங்கப்பூர்த் தமிழ் மொழி - தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாடு, உலகத் தமிழாசிரியர் மாநாடு ஆகிய அரங்குகளில் தமிழ் இலக்கியம், தமிழ்மொழி கற்றல் - கற்பித்தல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வகித்த பதவிகள்[தொகு]

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அரசாங்கத்தின் மக்கள் கழக மேலாண்மைக் குழு உறுப்பினராகவும், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் வெளியிடும் தமிழாசிரியர் குரல் எனும் இதழின் (1992 - 1996) பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

சிறுகதைத் தொகுப்புகள்[தொகு]

  • என்னதான் செய்வது?
  • புதிய அலைகள்

நாடக நூல்[தொகு]

  • உதயத்தை நோக்கி

பெற்ற பரிசில்கள்[தொகு]

  • தொலைக்காட்சி நாடகப் போட்டியில் 'ஒரே முறை' எனும் நாடகத்திற்கான முதல் பரிசு (1970)
  • என்னதான் செய்வது எனும் சிறுதைக்கான தமிழ்நேசனின் பவுன் பரிசு (1973)
  • சிங்கப்பூரின் சிறுவர் சிறுகதைப் போட்டியில் வென்றது யார்? எனும் சிறுகதைக்கான முதல் பரிசு
  • சிங்கப்பூரின் தேசியச் சிறுகதைப் போட்டியில் பிரிவு எனும் கதைக்கான இரண்டாம் பரிசு

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்._சுந்தரராசு&oldid=2713094" இலிருந்து மீள்விக்கப்பட்டது