பொன்மலர்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன்மலர்பாளையம் இது தமிழ்நாட்டில் உள்ள பரமத்தி-வேலூர் தாலுகா, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம்.[1] பெரும்பாலும் மக்கள் வேளாண்மையைத் தொழிலாக கொண்டுள்ளனர். மக்கள் தொகை சுமார் 1000 . ஊரின் நடுப்பகுதியில் பகவதி அம்மன் ஆலயம் அமைந்து உள்ளது.

90௦ ஆம் ஆண்டு இறுதியில் இக்கோவில் புதுபிக்கப்பட்டது. காவிரி ஆற்றின் கரைவெளி பகுதியில் அமைந்து உள்ளதால் கரும்பு, நெல், வாழை மற்றும் வெற்றிலை சாகுபடிக்கு உகந்த நிலம்.

ஊரின் மேற்குபுறம் கருப்பணசாமி கோவிலும். தெற்கு புறம் வீரபத்திரசாமீ கிழக்கு பக்கம் ஈஸ்வரன் மற்றும் ஐயப்பன் வடக்கில் முனியப்பன் கோவில்கள் அமைந்து உள்ளன. விநாயகர் கோவில் தண்ணீர் துறைக்கு செல்லும் வழியில் உள்ளது. மக்கள் அங்கங்கு விநாயகர் கோவில் அமைத்து உள்ளனர். திராவிட கலாசாரமே மேலோங்கி உள்ளது.

படிப்பறிவு பெற்ற மக்கள் 40 சதவிகிதம். பஞ்சயத்து துவக்கபள்ளி சுமார் 70 மாணவர்களுடன் நடைபெறுகிறது. கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரிட் சாலைகள் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து நிர்வாகத்தின் வருமானம் காவிரி ஆற்றின் மணல் சுரங்கம் மற்றும் சுங்க வரி மூலம் வருகிறது.

முசிரி சுப்பிரமணிய ஐயர் இங்கு பிறந்தவர். கொடுமுடிக்கு செல்லும் முன் கே. பி. சுந்தராம்பாள் சிறு வயதில் தன் தாயாருடன் இங்கு வாழ்ந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pincode of Ponmalarpalayam Paramathi Velur Namakkal District in State of Tamil Nadu, India". CI Bootstrap 3 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மலர்பாளையம்&oldid=3522546" இலிருந்து மீள்விக்கப்பட்டது