பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி
Vaccine description | |
---|---|
Target disease | Mumps |
வகை | Attenuated virus |
மருத்துவத் தரவு | |
மெட்லைன் ப்ளஸ் | a601176 |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
ATC குறியீடு | J07BE01 |
ChemSpider | NA |
பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி (Mumps vaccine) பொன்னுக்கு வீங்கியைப் பாதுகாப்பாக தடுக்கிறது. பெரும்பாலோருக்குப் தடுப்பூசி போடப்படும்போது மக்கள் தொகை அளவில் இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறைகிறது.[1] 90 விழுக்காடு நபர்களுக்குத் தடுப்பூசி போடபட்டால் 85 விழுக்காடு திறன் இருக்கும். [2] நீண்ட கால தடுப்புக்கு இரண்டு கால அளவு மருந்து தேவைப்படும். ஆரம்ப கால டோஸ் 12 மாதங்களிலிருந்து 18 மாதங்களுக்குள் இருக்கும்போது பரிந்துரைக்கபடுகிறது. இரண்டாவது டோஸ் குறிப்பாக இரண்டு வயதிலிருந்து ஆறு வயதிற்குள் இருக்கும்போது கொடுக்கப்படுகிறது. [1] ஏற்கனவே நோய் எதிர்ப்பு இல்லையெனத் தெரிந்தவர்களிடயே தடுப்பூசியின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.[3]
பாதுகாப்பு
[தொகு]பொதுவாக பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் மிகவும் மிதமாகவும் கொண்டிருக்கும்.[1][3] ஊசி போட்ட இடத்தில் மிதமான வலி மற்றும் வீக்கம் இருக்கலாம், காய்ச்சல் கூட இருக்கலாம் மேலும் குறிப்பிடதக்க பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே காணப்படும்.[1] இந்த தடுப்பூசி போடுவதால் நரம்பியல் சிக்கல்கள் ஏதும் ஏற்படுவதற்கான ஆதாரங்கள் போதுமான அளவு இல்லை.[3] கர்ப்பிணி களுக்கு அல்லது கடுமையான நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்கம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.[1] எனினும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் மத்தியில் விளைவுகள் ஏற்பட்டதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை.[1][3] இந்த தடுப்பூசி கோழியின் உயிரணுக்களிலிருந்து உருவாக்கபட்டிருந்தாலும் முட்டை ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடலாம் [3]
பயன்பாடு
[தொகு]பெரும்பாலான வளரும் நாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் நோய் தடுப்பு திட்டத்தில் இது சேர்க்கப்பட்டிருக்கும், மேலும் அம்மை மற்றும் மணல்வாரி தடுப்பூசி யுடன் சேர்ந்து எம் எம் ஆர் என்ற பெயரில் போடப்படும். [1] முந்தைய மூன்று தடுப்பூசிகளுடன் தட்டம்மை தடுப்பூசியும் சேர்ந்த எம் எம் ஆர் வி என்ற ஒரு தயாரிப்பும் கிடைக்கிறது.[3] 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி 110 நாடுகள் இந்த முறையில் இந்த தடுப்பூசியை வழங்குகிறது. பரவலாக தடுப்பூசி மேற்கொள்ளபட்ட பகுதிகளில் 90 விழுக்காடு வரை நோய் பரவுவது குறைந்துள்ளது. ஏறத்தாழ ஒரே வகையைச் சேர்ந்த அரை பில்லியன் அளவு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன [1]
வரலாறு, சமூகம் மற்றும் கலாசாரம்
[தொகு]பொன்னுக்குவீங்கி தடுப்பூசிக்கு முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு உரிமம் வழங்கபட்டது.[3] மேம்படுத்தபட்ட தடுப்பூசிகள் 1960 களிலிருந்து வணிக ரீதியாக கிடைக்க தொடங்கின.[1] --> ஆரம்பகால தடுப்பூசி செயல்படாததாக ஆக்கபட்டாலும் பிற்பாடு வந்த தயாரிப்புகள் பலவீனபடுத்தபட்ட உயிருள்ள நுண்ணுயிர்களாக இருந்தன.[1] இது உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில் உள்ளது. ஒரு சுகாதார அமைப்பு க்குத் தேவையான முக்கியமான அடிப்படை மருந்துகளில் ஒன்று.[4] 2007 கணக்குப்படி பலதரப்பட்ட வகைகள் பயன்பாட்டிலுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Mumps virus vaccines.". Weekly epidemiological record 82 (7): 49-60. 16 Feb 2007. பப்மெட்:17304707. http://www.who.int/wer/2007/wer8207.pdf?ua=1.
- ↑ Hviid A, Rubin S, Mühlemann K (March 2008). "Mumps". The Lancet 371 (9616): 932–44. doi:10.1016/S0140-6736(08)60419-5. பப்மெட்:18342688.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Atkinson, William (May 2012). Mumps Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases (12 ed.). Public Health Foundation. pp. Chapter 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780983263135.
- ↑ "WHO Model List of EssentialMedicines" (PDF). World Health Organization. October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.