பொன்னாங் கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொன்னாங்கழுகு
Steinadler Aquila chrysaetos closeup1 Richard Bartz.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: கழுகு வரிசை
குடும்பம்: Accipitridae
பேரினம்: Aquila
இனம்: A. chrysaetos
இருசொற்பெயர்
Aquila chrysaetos
லின்னேயஸ், 1758
பொன்னாங்கழுகின் புவியியற்பரம்பல்
இளம்பச்சை = கூடுகட்டும் பகுதி
நீலம் = குளிர்காலத்தில் இருக்குமிடங்கள்
கரும்பச்சை = ஆண்டு முழுதும் இருக்குமிடங்கள்

பொன்னாங் கழுகு (Golden Eagle) என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இக்கழுகுகள் பெரிய பறவைகள். இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும். வலுவான கால்களும் கால்களில் வல்லுகிர்களும் (உகிர் = நகம்) உண்டு. விலங்கின் தசையைக் குத்திக் கிழிக்க கூரிய நுனி உடைய வளைந்த அலகு உண்டு.

இப்பறவைகள் எண்ணிக்கையில் மிகவும் அருகி இருந்தன. இவை ஒரு காலத்தில் ஐரோப்பாவிலும், வட ஆசியப் பகுதிகளிலும் வட ஆப்பிரிக்க, சப்பான் நாடுகளிலும் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. இக்காலத்தில் இப்பறவைகள் பெரும்பாலும் மலைப்பகுதிகளிலேயே கூடு கட்டி வழ்ந்து வருகின்றன. இப்பறவைகளை கசக்ஸ்தான் போன்ற நாடுகளில் சிறு விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு கழுகுகளைப் பழக்குவதற்கு, கழுகுப்பயிற்சி என்று பெயர்.

இனப்பெருக்கம்[தொகு]

சனவரி, மே ஆகிய மாதங்களுக்கு நடுவே, பெட்டைக் கழுகுகள் பெரும்பாலும் 2 முட்டைகள் இடுகின்றன. சுமார் 45 நாட்கள் கழித்து, முட்டையில் இருந்து கழுகுக்குஞ்சுகள் பிறக்கின்றன. பிறந்தவுடன் அவை வெள்ளை நிறத்தில் இருக்கும். பின்னர் சுமார் 50 நாட்களுக்கு தீனி ஊட்டிய பின் மெள்ள பறக்கத் துவங்குகின்றன.

இரை[தொகு]

பொன்னாங் கழுகுகள் குறு முயல்கள், எலி, மான் குட்டிகள் (மான் மறி), சிறு நரிகள், ஆட்டுக் குட்டிகள் பேன்றவற்றைக் கொன்று தின்னும். இப்படி ஆட்டுக் குட்டிகளை தின்னுவதால், ஆடு வளர்ப்பவர்களுக்கு இப்பறவை எதிரியாய்த் தென் படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னாங்_கழுகு&oldid=1827130" இருந்து மீள்விக்கப்பட்டது