பொன்னம்பலம் குமாரசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. குமாரசுவாமி
P. Coomaraswamy
இலங்கை சட்டவாக்கப் பேரவையின் தமிழ் உறுப்பினர்
பதவியில்
1892–1898
முன்னையவர்பொன்னம்பலம் இராமநாதன்
பின்னவர்டபிள்யூ. ஜி. ரொக்வூட்
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
பதவியில்
1873–1879
பதவியில்
1885–1889
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1849-12-07)7 திசம்பர் 1849
இறப்பு7 சூன் 1906(1906-06-07) (அகவை 56)
கொழும்பு, இலங்கை
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை
தொழில்வழக்கறினர்
இனம்இலங்கைத் தமிழர்

முதலியார் பொன்னம்பலம் குமாரசுவாமி (Ponnambalam Coomaraswamy, 7 டிசம்பர் 1849 – 7 சூன் 1906)[1] என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

1849 டிசம்பர் 7 இல் பிறந்த இவர்[2][3] யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் அ. பொன்னம்பலம் என்பவருக்குப் பிறந்தார்.[2] சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர் இவரது சகோதரர்கள் ஆவர்.[2]

குமாரசுவாமி கொழும்பு றோயல் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]

பணி[தொகு]

தனது பட்டப் படிப்பை முடித்துக் கொண்ட குமாரசுவாமி வழக்கறிஞர் தொழிலில் இணைந்து கொண்டார்.[2]

அரசியலில்[தொகு]

கொழும்பு மாநகர சபையில் சனவரி 1873 முதல் அக்டோபர் 1879 வரையும், பின்னர் நவம்பர் 1885 முதல் டிசம்பர் 1889 வரையும் உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.[4] 1893 இல் இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக சேர் பொன். இராமநாதனிற்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[2][5]

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தலைவராக இருந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவுவதற்கு முன்னின்று உழைத்தார்.[2] கொழும்பு கொம்பனித் தெருவில் முருகன் கோவில் ஒன்றையும் நிறுவினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]