உள்ளடக்கத்துக்குச் செல்

பொத்தபள்ளி இராசகோபால ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொத்தபள்ளி இராசகோபால ராவ்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971–1984
முன்னையவர்கொகினேனி ரங்க நாயுகுலு
பின்னவர்அப்பயதுர அனுமந்து
தொகுதிஸ்ரீகாகுளம்
பதவியில்
1952 - 1967
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்கொகினேனி ரங்க நாயுகுலு
தொகுதிஸ்ரீகாகுளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1மார்ச் 1923
ஆகுலபேட்டை, அமதலவலசா, இந்தியா)
இறப்பு22 பெப்ரவரி 1992 (வயது 68)
விசாகப்பட்டினம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சீத்தம்மாள்
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் ஒரு மகள் என மூவர்
இணையத்தளம்

பொத்தபள்ளி இராசகோபால ராவ் (Boddepalli Rajagopala Rao) (12 மார்ச் 1923 - 22 பிப்ரவரி 1992) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் 1923 ஆம் ஆண்டு அமதலவலசாவிற்கு அருகிலுள்ள ஆகுலபேட்டையில் பொத்தபள்ளி சீதாராமசாமி, அன்னபூர்ணா ஆகியோருக்கு பிறந்தார். விஜயநகரக் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

அரசியல் வரலாறு

[தொகு]

கிராம ஊராட்சி மட்டத்திலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொத்தபள்ளி இராசகோபால ராவ், 1952 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரையும் (முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மக்களவை) மற்றும் 1971 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் (ஐந்தாவது மக்களவை, ஆறாவது மக்களவை மற்றும் ஏழாவது மக்களவை) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சிறீகாகுளம் மக்களவைத் தொகுதியை பொத்தபள்ளி இராசகோபால ராவ் ஆறு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] முதன்முறையாக சுயேச்சை வேட்பாளராக இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

ஐதராபாதில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குநராக 6 ஆண்டுகள் பணியாற்றினார்.

இறப்பும் மரியாதையும்

[தொகு]

பொத்தபள்ளி இராசகோபால ராவ், 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அன்று விசாகப்பட்டினத்தில் தனது 68 வயதில் இறந்தார்.[2]

வடக்கு ஆந்திரப் பகுதியில் உள்ள பின்தங்கிய சாதியினரின் மேம்பாட்டிற்காக அரசாங்கம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இவரது முயற்சிகள் காரணமாகும். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவரது நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறீகாகுளம் புதுசாலை சந்திப்பில் உள்ள இவரது சிலையை அக்கிவரம் ஊராட்சி மக்கள் திறந்து வைத்தனர்.

சிறிகாகுளம் மாவட்டத்தில் வம்சதாரா ஆற்றின் மீது கட்டப்பட்ட வம்சதாரா திட்டத்திற்கு பொத்தபள்ளி இராசகோபால ராவ் பெயரிடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members of Parliament". Archived from the original on 9 August 2007. Retrieved 15 June 2007.
  2. "Obituary in Parliament". Archived from the original on 29 September 2007. Retrieved 15 June 2007.
  3. 1=The Hindu on Vamsadhara Project}}

வெளி இணைப்புகள்

[தொகு]