பொது அஞ்சல் அலுவலகம், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொது அஞ்சல் அலுவலகம், சென்னை
The General Post Office, Chennai.jpeg
1905இல் பொது அஞ்சல் அலுவலகம், சென்னை
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணிஇந்தோ சரசனிக் பாணி
முகவரிராஜாஜி சாலை, ஜார்ஜ் டவுன், சென்னை
நகர்சென்னை
நாடுஇந்தியா
ஆள்கூற்று13°5′34″N 80°17′28″E / 13.09278°N 80.29111°E / 13.09278; 80.29111ஆள்கூற்று: 13°5′34″N 80°17′28″E / 13.09278°N 80.29111°E / 13.09278; 80.29111
கட்டுமான ஆரம்பம்1874
திறப்பு1884
செலவுIndian Rupee symbol.svg 680,000
கட்டுவித்தவர்பொது அஞ்சல் அலுவலகம்
உயரம்125 அடிகள் (38 m)
அளவுகள்
பிற அளவுகள்352 அடிகள் (107 m) long, 162 அடிகள் (49 m) broad
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை3
தளப்பரப்பு55,000 சதுர அடிகள் (5,100 m2)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்ராபர்ட் ஷிசோலம்
இணையத் தளம்
www.chennaipost.gov.in/chennaigpo.aspx

சென்னை பொது அஞ்சல் அலுவலகம் (General Post Office, Chennai), சென்னையின், பாரிஸ் கார்னரில், ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. இது 1884 ல் கட்டப்பட்ட ஒரு பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது. இது சென்னைக் கடற்கரை புறநகர் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள சென்னைப் பொது அஞ்சல் அலுவலகம் சுமார் 23.33 கி.மீ (9.01 சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது. மேலும், சுமார் 220,000 மக்களுக்கு உதவுகிறது. இது துணை அல்லது கிளை அலுவலகங்கள் ஏதும் கொண்டிருக்கவில்லை.[1]

வரலாறு[தொகு]

1712 இல், ஆளுநர் ஹாரிஸன் (1711-1717) முதல் கம்பெனியின் அஞ்சல் சேவையானது டாக் ரன்னர் மூலம் சென்னையிலிருந்து வங்காளத்திற்கு அஞ்சல் எடுத்துச் செல்வதிலிருந்து தொடங்கியது. 1736 வாக்கில், ஒரு அஞ்சல் அமைப்பு முறையின் தேவை சற்று அதிகமாகவே இருந்தது. 1774 இல், தனியார் கடிதங்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கியது. 1785 மற்றும் 1786 ஆம் ஆண்டுகளில் ஜான் பிலிப் பர்ல்டன் மற்றும் தோமஸ் லீவின் ஆகியோர் சென்னை கிழக்கு இந்தியா கம்பனியின் அஞ்சல் விதிகளை ஏற்படுத்துவதற்கும் அஞ்சல் வலையமைப்பை உருவாக்குவதற்கும் ஒரு அஞ்சல் அதிகாரத்தை நிறுவுவதற்கும் தேவை ஏற்பட்டுள்ளது என்று ஆளுநரிடம் பரிந்துரை செய்தனர். இந்தச் செயல் புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு அஞ்சல் அலுவலகத்தை நிறுவுவதில் முடிந்தது, அதன் பின்னர் அரசாங்கத்தின் ஊழியர்களின் கடிதங்களுக்கு இலவசமாகவும், நிறுவனத்தின் ஊழியர்களின் கடிதங்களுக்கு கட்டணம் விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.[2] அரசு இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு, சென்னையின் முதல் பொது அஞ்சல் அலுவலகம் ஆளுநர் சர் அர்கிபால்ட் காம்ப்பெல் (1786-1790) என்பவரால் நிறுவப்பட்டது. இவர் ஆண் மற்றும் பெண் அனாதை ஆசிரமங்களையும் (செயின்ட் ஜார்ஜ் பள்ளி) உருவாக்கியவர் ஆவார். இதனால் அஞ்சல் சேவை என்ற வசதியை அரசு ஏற்படுத்தியது.

சென்னையில் பொது அஞ்சல் அலுவலகம் முதன்முதலில் 1786 ஜூன் 1 அன்று, கடல் வாயிலுக்கு வெளியே, செயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது. முதல் பொதுத் தலைமை அஞ்சல் அலுவலராக சர் அர்கிபால்ட்டின் என்பவரும், செயலாளரக ஏ.எம். காம்ப்பெல் என்பவரும் நியமிக்கப்பட்டனர். ராபர்ட் மிட்ஃபோர்டு துணை தலைமை அஞ்சல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு ஒரு எழுத்தர், ஐந்து அஞ்சல் பிரிப்பவர்கள், அலுவலக உதவியாளர் மற்றும் பத்து அஞ்சல் எடுதுச் செல்பவர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டது. பின்னர், கம்பெல்லின் நியமனத்திற்கு பதிலாக, ஆலிவர் கோல்ட் சென்னையின் முதல் பொதுத் தலைமை அஞ்சல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்தோ-சாராசெனிக் பாணியில் புதிய கட்டிடத்தை நிறைவுசெய்தவுடன், சென்னைஅஞ்சல் அலுவலகம் 1884 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதன் சொந்த கட்டித்திற்கு இடம் பெயர்ந்தது, இதை பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் ராபர்ட் சிஷோலம் என்பவர் வடிவமைத்தார்.[3]

செயல்படும் நேரம்[தொகு]

சென்னை பொது அஞ்சல் நிலையம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 8:00 மணி முதல் இரவு 8.30 வரை செயல்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில், இது 10:00 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகிறது. வேகப்பதிவு, பதிவு இடுகை, சிப்பமிடுதல், காப்பீடு, இ-பில்லிங் மற்றும் மின்னஞ்சல் இடுகை போன்ற வசதிகள் உள்ளன. சென்னை பொது அஞ்சல் நிலையம் 24 மணி நேர தந்தி அலுவலகத்தைக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் தந்தி சேவை 2013 ஆம் ஆண்டு ஜூலை 15 முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.[4] [5]

மேலும் பார்க்க[தொகு]

  • Architecture of Chennai
  • Heritage structures in Chennai
  • Indian Postal Service


குறிப்புகள்[தொகு]

  1. "Chennai GPO". Chennai Post. பார்த்த நாள் 10 Mar 2012.
  2. "History of Tamil Nadu Postal Circle". Tamil Nadu Postal Circle. பார்த்த நாள் 11 Mar 2012.
  3. Soman, Sandhya; A. Selvaraj (6 November 2011). "City's postal history in ruins". The Times of India (Chennai: The Times Group). http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/chennai/30366431_1_heritage-building-post-office-chief-postmaster. பார்த்த நாள்: 11 Mar 2012. 
  4. https://www.mobigyaan.com/telegraph-services-to-be-discontinued-in-india-from-july-15
  5. https://thediplomat.com/2013/06/india-sends-its-last-telegram-stop/

வெளி இணைப்புகள்[தொகு]