உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுவான கடல்சார் ஒப்பந்தம் 1820

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொதுவான கடல்சார் ஒப்பந்தம் 1820 (General Maritime Treaty of 1820) அரபு நாடுகளுக்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே 1820 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரசீக வளைகுடாவை பகிர்ந்துகொள்வதில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.அது கடல்சார் ஒப்பந்தம் 1820 என அழைக்கப்படுகிறது. அபுதாபி , ஷார்ஜா , அஜ்மன் மற்றும் உம்- அல்- குவைன் ஆகிய நாடுகளுக்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.ரஸ் அல் கைமா நகரில் இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதி சர் வில்லியம் கிராண்ட்- கெய்ர் ஆதரவுடன் இவ்வொப்பந்தம் ஏற்பட்டது. 1820 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஹ்ரைன் நாடு தன்னையும் இந்த ஒப்பந்தத்தில் இணைத்துக்கொண்டது.

பிரித்தானிய படை 800 சிப்பாய்கள் மற்றும் பீரங்கிகளைக் கொண்டு ராஸ் அல் கைமா நகரத்தை வெடிக்கச் செய்தது. பஹ்ரைனில் தஞ்சம் புகுந்த பத்து கப்பல்களும் அழிக்கப்பட்டன.[1] இந்த நடவடிக்கையின் போது ராயல் கடற்படைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.[2]

சிறப்புகள்

[தொகு]

பாரசீக வளைகுடாவில்

  • கடற்கொள்ளையை தடுத்தல்.
  • அடிமைத்தனத்தையும் அடிமை வியாபாரத்தையும் ஒழித்தல்.
  • பயன்படுத்தக்கூடிய அனைத்து கப்பல்களையும் இங்கிலாந்து படைகளிடம் பதிவு செய்தல்.
  • பாரசீக வளைகுடா பகுதியில் போட்டியிடும் ரஷ்ய அரசு மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சக்திகளைத் தவிர்த்தல்.
  • இங்கிலாந்து நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியா போன்ற நாடுகளுக்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துதல் என்ற இங்கிலாந்தின் போர்சார்ந்த கொள்கையில் இந்த உடன்பாடு இருந்தது.
  • கஜார் ஈரான் , ஒட்டோமான் பேரரசு( இன்றைய துருக்கி ) மற்றும் இரண்டாம் சவுதி அரசு( நெஜ் குடியரசு ) ஆகிய நாடுகளின் சுதந்திரத்தை காப்பாற்றுவோம் எனக்கூறி இங்கிலாந்து பாரசீக வளைகுடா நாடுகளை சமாதானப்படுத்த முயன்றது.

சான்றுகள்

[தொகு]
  1. Lorimer, John (1915). Gazetteer of the Persian Gulf. British Government, Bombay. p. 669.
  2. United service magazine Part 1, pp. 711–15.