பொதுநலவாய தலைமைச் செயலகம்
Appearance
(பொதுநலவாய தலைமைச்செயலகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொதுநலவாய தலைமைச் செயலகம் | |
---|---|
அமைப்பின் வகை | முதன்மை அங்கம் |
தலைமை | பொதுநலவாய செயலாளர்-நாயகம்
|
Status | செயற்பாட்டில் |
அமைக்கப்பட்ட நாள் | 1965 |
தலைமையகம் | மார்ல்பரோ மாளிகை, வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
இணையதளம் | www.thecommonwealth.org |
தாய் அமைப்பு | பொதுநலவாய நாடுகள் |
பொதுநலவாய தலைமைச் செயலகம் (Commonwealth Secretariat) பொதுநலவாய நாடுகளின் மைய நிறுவனமும் அரசுகளுக்கிடையேயான முகமையுமாகும். இது உறுப்பினர்களிடையே கூட்டுறவை வளர்க்க வகை செய்கிறது; பொதுநலவாய அரசுத் தலைவர்கள் சந்திப்புக்கள் உட்பட சந்திப்புக்களை ஒருங்கிணைப்பது, பொதுநலவாய கொள்கைகளையும் முடிவுகளையும் நிறைவேற்றத் தேவையான உதவிகளை உறுப்பினர் நாடுகளுக்கு வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.[1]
இச்செயலகத்திற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பார்வையாளர் தகுதி உண்டு. இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் மார்ல்பரோ மாளிகையில் அமைந்துள்ளது. முன்பு அரண்மனையாக இருந்த இதனைப் பொதுநலவாய நாடுகளின் தலைவர் ஐக்கிய இராச்சியத்தின் அரசி எலிசபெத் II இச்செயலகத்திற்காக வழங்கியுள்ளார்.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Commonwealth Secretariat". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 27 July 2007.