பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
23வது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு
இடம்பெற்ற நாடுஇலங்கை இலங்கை
தேதிகள்15–17 நவம்பர் 2013
இடம்தாமரைத் தடாகம் அரங்கு - ஆரம்ப விழா
பிஎம்ஐசிஎச் - மாநாட்டு இடம்
Waters Edge - அரசு தலைவர்கள் தங்குமிடம்
நகரம்கொழும்பு
முன்னையது2011
பின்னையது2015
இணையதளம்www.chogm2013.lk

23வது பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மாநாடு (23st Commonwealth Heads of Government Meeting, CHOGM) 2013 நவம்பர் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பு நகரில் இடம்பெறுகிறது.[1] 2009 ஆம் ஆண்டில் திரினிடாட், டொபாகோவில் இடம்பெற்ற மாநாட்டில் 2013 ஆம் ஆண்டில் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது. 2011 இல் ஆத்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்ற மாநாட்டில் இது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

பொதுநலவாய நாடுகளின் தலைவர் என்ற வகையில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறையே முதற்தடவையாக உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. 87 வயது மகாராணியின் உடல்நிலை காரணமாக இவருக்குப் பதிலாக வேல்சு இளவரசர் சார்லசு கலந்து கொள்வார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.[2]

ஒன்றியொதுக்கல்[தொகு]

இலங்கையில் மனித உரிமைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் இலங்கை மாநாட்டில் தாம் பங்கேற்கப் போவதில்லை என கனடாவின் பிரதமர் ஸ்டீவன் ஆர்ப்பர் அறிவித்துள்ளார். இவருக்குப் பதிலாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தீபக் ஒப்ராய் கலந்து கொள்கிறார்.[3] அத்துடன் இலங்கைக்கு எதிராக பொதுநலவாயம் நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், தமது நாடு அவ்வமைப்பிற்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் கனடியப் பிரதமர் எச்சரித்துள்ளார்.[4][5][6]

இதே காரணத்துக்காக ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையின் வெளியுறவுத் துறைக் குழுவும் பிருத்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனாலும், தாம் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாகவும், இலங்கைக்கான தமது பயணத்தின் போது இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்திற்கும் தாம் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.[7]

இந்திய அரசு இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது எனவும், இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க இந்திய அரசு கோர வேண்டுமெனவும், 2013 அக்டோபரில் தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது[8][9][10][11]. இதன் மூலம் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் இந்தியாவின் சார்பாக நவம்பர் மாதம் 12ம் நாள் இந்திய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. சல்மன் குர்சித் கலந்து கொள்ளவதாக அறிவிக்கப்பட்டது[12]. ஆனால் இம்மாநாட்டிற்கு, இந்தியாவின் சார்பாக யாரும் பங்கேற்கக்கூடாது, பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்சவை நியமிக்கக்கூடாது, மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க வேண்டும் என்பனவற்றை மீண்டும் வலியுறுத்தி, 2013 நவம்பர் மாதம் 12ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது[13].

நியூசிலாந்தின் பசுமைக் கட்சியும் மாநாட்டை அந்நாடு புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது.[14][15] . இந்தக் கட்சியானது இலங்கையில் நடந்த மற்றும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் காரணமாக, இலங்கை அரசு மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதை நியூசிலாந்து அரசு எதிர்க்க வேண்டும் என்ற கருத்துப்பட, தொடர்பான பல கேள்விகளை தமது அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது[16][17].

மலேசியாவிலும் இந்த மாநாடு புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது[18].

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றின் காரணமாக, மொரீசியசு நாடும் இம்மாநாட்டை புறக்கணிக்கின்றது[19][20].

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்[தொகு]

பங்கேற்ற நாடு நாட்டின் சார்பாக பங்கேற்றோர்[21]
பொதுநலவாயநாடுகளின் கூட்டமைப்பு இளவரசர் சார்லசு
 அன்டிகுவா பர்புடா
 ஆத்திரேலியா பிரதமர் டோனி அப்பாட்
 பஹமாஸ் பிரதமர் பெர்ரி கிறிஸ்டி
 வங்காளதேசம் பிரதமர் ஷேக் அசினா
 பார்படோசு
 பெலீசு
 போட்சுவானா
 புரூணை அதிபர் அஸ்னல் போல்கையா
 கமரூன்
 கனடா தீபக் ஓப்ராய் (பாராளுமன்றச் செயலர்)[22]
 சைப்பிரசு சனாதிபதி நிக்கோஸ் அனஸ்தாசியாதிசு
 டொமினிக்கா
 கானா
 கிரெனடா
 கயானா
 இந்தியா சல்மான் குர்சித் (வெளியுறவுத்துறை அமைச்சர்)
 ஜமேக்கா
 கென்யா
 கிரிபட்டி
 லெசோத்தோ
 மலாவி
 மலேசியா பிரதமர் நாசிப் ரசாக்
 மாலைத்தீவுகள்
 மால்ட்டா பிரதமர் ஜேசப் மஸ்கட்
 மொரிசியசு
 மொசாம்பிக் ஓல்திமைரோ பாலாய் (வெளியுறவுத்துறை அமைச்சர்)
 நமீபியா சனாதிபதி ஹிபிகேபுண்யே லுகாஸ்
 நவூரு சனாதிபதி பாரன் வாகா
 நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ
 நைஜீரியா துணை சனாதிபதி முகமது நமாதி சம்போ
 பாக்கித்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்
 பப்புவா நியூ கினி துணை பிரதமர் லியோ தியான்
 ருவாண்டா சனாதிபதி பால் காகமே
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் பிரதமர் டென்சில் டக்ளஸ்
 செயிண்ட். லூசியா
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்
 சமோவா பிரதமர் சயிலேலே மலயிலேகோயி
 சீசெல்சு பிரதமர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல்
 சியேரா லியோனி
 சிங்கப்பூர் பிரதமர் லீ உசைன் லுங்
 சொலமன் தீவுகள் பிரதமர் கார்தன் டார்சி லிலோ
 தென்னாப்பிரிக்கா சனாதிபதி ஜெக்கப் கெத்லியேலிகிசா சுமா
 இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச (புரவலர்)
 சுவாசிலாந்து பிரதமர் பர்னபாஸ் சுபிசிசு திலாமினி
 தன்சானியா
 தொங்கா பிரதமர் சிலாலே ஆத்தங்கோ துய்வன்கோ
 டிரினிடாட் மற்றும் டொபாகோ
 துவாலு ஆளுனர் லகோபா தாயெயா இத்தாலேலி
 உகாண்டா துணை சனாதிபதி எட்வர்ட் கிவானுகா சேகண்டி
 ஐக்கிய இராச்சியம் பிரதமர் டேவிட் கேமரன்
 வனுவாட்டு பிரதமர் மோவானா கார்காசஸ் கலோசில்
 சாம்பியா துணை சனாதிபதி கை ஸ்காட்

மாநாட்டு நிகழ்வுகள்[தொகு]

  • மாநாட்டிற்கு இலங்கை வந்த இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரன், பத்திரிக்கையாளர்களுடன் இலங்கைத் தமிழரின் இன்றைய வாழ்வு நிலை குறித்து அறிய யாழ்ப்பாணத்திற்கு விரைந்தார். 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் வெளிநாட்டுப் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் கேமரூனை வரவேற்று, இறுதிக்கட்ட போர் நடந்த போது காணாமற்போன சொந்தங்களை மீட்கும் படி அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் சமீபத்தில் தீவைக்கப்பட்ட தமிழ் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் சென்றார். மேலும் இது பற்றி அதிபர் ராசபக்சவிடம் கேட்கப்போவதாகவும் தெரிவித்தார்[23].
  • மாநாட்டின் இரண்டாம் நாளன்று பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர், நாட்டின் வடக்கு மாகாணத்தில் இலங்கை ராணுவத்தினால் நடந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை குறித்து உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையை வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இல்லாவிட்டால், இங்கிலாந்து இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிடும் என்றும் அவர் கூறினார்[24].
  • மனித உரிமை மீறல்கள் மற்றும் பெரும் இனவழிப்பு செய்த இலங்கை இம்மாநாட்டை ஏற்று நடத்தியதால், ஏற்கனவே திட்டமிட்டபடி 2015 ஆண்டு மொரீசியசில் நடப்பதாக இருந்த பொதுநலவாய அரசுத் தலைவர்களின் அடுத்த மாநாட்டை ஏற்று நடத்த முடியாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[25][26].

மேற்கோள்கள்[தொகு]

  1. The Commonwealth – thecommonwealth.org. அணுகப்பட்டது 7 டிசம்பர் 2012.
  2. "Prince Charles gets higher Commonwealth role as Queen stays home". CBC News. 8 மே 2013. http://www.cbc.ca/news/world/story/2013/05/07/f-queen-engagements.html. பார்த்த நாள்: 10 May 2013. 
  3. Clark, Campbell (7 October 2013). "Harper raises stakes by threatening to cut Commonwealth funding". The Globe and Mail. http://www.theglobeandmail.com/news/politics/harper-scrubs-sri-lanka-visit-over-human-rights-violations/article14719839/. பார்த்த நாள்: 8 அக்டோபர் 2013. 
  4. Petrasek, David. "Canada Should Play the Royal Card Against Sri Lanka's Government". CIPSBlog. Centre for International Policy Studies, University of Ottawa. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Commonwealth Asks Canada to Drop Sri Lanka Boycott". அக்டோபர் 2012. http://www.indocanadaoutlook.com/index.php/archives/2012/october-2012/358-commonwealth-asks-canada-to-drop-sri-lanka-boycott. பார்த்த நாள்: 17 பெப்ரவரி 2013. 
  6. The Canadian Press (7 October 2013). "Stephen Harper cancels Sri Lanka visit over human rights violations". Toronto Star. http://www.thestar.com/news/canada/2013/10/07/harper_makes_good_on_threat_to_boycott_sri_lanka_over_human_rights_violations.html. பார்த்த நாள்: 7 October 2013. 
  7. "David Cameron will defy boycott calls to attend Sri Lanka Commonwealth Summit". Daily Telegraph. 3 மே 2013. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/srilanka/10036673/David-Cameron-will-defy-boycott-calls-to-attend-Sri-Lanka-Commonwealth-Summit.html. பார்த்த நாள்: 10 மே 2013. 
  8. "TN Assembly passes resolution demanding CHOGM boycott". பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
  9. "Tamil Nadu govt moves resolution demanding Centre to boycott CHOGM". Archived from the original on 2013-10-27. பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
  10. "Tamil Nadu assembly passes resolution demanding India boycott Commonwealth meeting". Archived from the original on 2013-10-27. பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
  11. "India should stay away from CHOGM: Tamil Nadu assembly". பார்க்கப்பட்ட நாள் 27 October 2013.
  12. "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மன் குர்சித் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமருக்கு பதில் கலந்து கொள்ளப்போகிறார்". பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013.
  13. "தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை: முதல்வர் ஜெயலலிதா". பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013.
  14. http://tamilnet.com/art.html?catid=13&artid=36753
  15. http://www.stuff.co.nz/national/politics/9364734/Protest-over-Sri-Lankan-abuse
  16. "Order Paper and questions, Questions for oral answer, 5. Human Rights, Sri Lanka—Commonwealth Heads of Government Meeting". பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013. {{cite web}}: Unknown parameter |Web= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  17. "12.11.13 - Question 5: Jan Logie to the Prime Minister". பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013. {{cite web}}: Unknown parameter |Web= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Boycott CHOGM, Najib urged". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013. {{cite web}}: Unknown parameter |Web= ignored (help)
  19. "மொரீசியசு பிரதமரும் மாநாட்டை புறக்கணிக்கிறார்". Archived from the original on 2013-11-12. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013.
  20. "இலங்கை காமன்வெல்த் மாநாடு: மொரீஷியஸ் நாடு புறக்கணிப்பு". பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2013.
  21. http://www.chogm2013.lk/
  22. http://news.nationalpost.com/2013/11/13/sri-lanka-accuses-canadian-government-of-placating-tamil-tigers-as-row-over-commonwealth-summit-grows/
  23. "யாழ்ப்பாணத்தில் டேவிட் கேமரூன்: தமிழ் மக்களையும், தலைவர்களையும் சந்தித்தார்". பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2013.
  24. "போர் குற்ற விசாரணை விரைவில் நடத்து! இலங்கைக்கு இங்கிலாந்து எச்சரிக்கை". பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2013.
  25. "பொதுநலவாய அரசுத் தலைவர்களின் அடுத்த மாநாட்டை ஏற்று நடத்த முடியாது: மொரீசியசு". பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2013.
  26. "பொதுநலவாய அரசுத் தலைவர்களின் 2015 மாநாட்டை மொரீசியசு ஏற்று நடத்தாது: மொரீசியசு பிரதமர்". பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2013.