பொதுக் கருத்து
பொதுக் கருத்து (Public opinion) என்பது, சமூகத்துடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட தலைப்பு அல்லது வாக்களிக்கும் நோக்கம் குறித்த கூட்டுக் கருத்து ஆகும். இது மக்களைப் பாதிக்கும் விடயங்களில் அவர்களின் பார்வைகளைப் பொறுத்தாகும்.
21-ஆம் நூற்றாண்டில், பொதுக் கருத்தானது ஊடகங்களால் பெரிதும் பாதிக்கப்படுவதாகப் பரவலாகக் கருதப்படுகிறது. பொதுக் கருத்தைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளும் பொது நலனில் அக்கறை கொண்டவர்களும் பெரும்பாலும் விளம்பரம் அல்லது சொல்லாட்சியைப் பயன்படுத்தி தாக்கத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். சில முக்கியமான முடிவுகளை வெளிக்கொணர்வதில் பொதுக் கருத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்வுப் பகுப்பாய்வு அல்லது கருத்துச் சுரங்கம் என்பது பொது மக்களின் எண்ணங்கள் அல்லது உணர்வுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும்.[1] தவறான தகவல்களின் மூலம் பொதுக் கருத்து பாதிக்கப்படுவது பரவலாக இருக்கும் சிக்கலாகும்.
சொற்பிறப்பியல்
[தொகு]"பொதுக் கருத்து" என்ற சொல் பிரெஞ்சுவின் opinion publique இருந்து பெறப்பட்டது. இந்தச் சொல் முதன்முதலில் 1588-ஆம் ஆண்டில் பிரெஞ்சு மறுமலர்ச்சியின் மிக முக்கியமான தத்துவஞானிகளில் ஒருவரான மைக்கேல் டி மோன்டைன் என்பவரால் அவரது புகழ்பெற்ற கட்டுரைகளின் இரண்டாம் பதிப்பில் (அத்தியாயம் XXII) பயன்படுத்தப்பட்டது.[2]
இந்த பிரெஞ்சுச் சொல் 1761 ஆம் ஆண்டு ஜீன்-ஜாக் ரூசோவின் "ஜூலி, அல்லது தி நியூ ஹெலோயிஸ்" என்ற படைப்பிலும் காணப்படுகிறது. [3] [4]
வரலாறு
[தொகு]அரசியல் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சக்தியாக பொதுக் கருத்து வெளிப்படுவது 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து வருகிறது வில்லியம் சேக்சுபியர் பொதுக் கருத்தை "வெற்றியின் எஜமானர்" என்றும், பிலைசு பாஸ்கல் "உலகின் ராணி" என்றும் கூறினர்.
தவறான தகவல்
[தொகு]சமூக அறிவியல் ஆராய்ச்சி கழகத்தின் கூற்றுப்படி, "நாம் தவறான தகவல்களின் புயலின் மத்தியில் இருக்கிறோம். தவறான தகவல் அல்லது அரைகுறைத் தகவல்கள் ஆபத்தானது". [5]
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்
[தொகு]ஒரு தனி நபர் ஒரு கருத்தை எவ்வாறு அனுகுகிறார் என்பதைப் பொறுத்து உருவாக்கப்படும் அல்லது பகிரப்படும் உள்ளடக்கங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவுகின்றன. இவை, மற்றவர்களின் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தி பொதுக் கருத்தைப் பாதிக்கிறது.[6] ஜெர்மன் மார்ஷல் நிதியின் நவீன மற்றும் ஜனநாயக முன்முயற்சியின் மூத்த உறுப்பினரும் இயக்குநருமான தூதர் (ஓய்வு) கரேன் கோர்ன்ப்ளூவின் கூற்றுப்படி, சமூக ஊடகங்கள் தீவிரமயமாக்கல் மூலம் தவறான தகவல்களைப் பரப்பி தீவிரவாதத்திற்கு வழிவகுத்துள்ளன. [7] டிக்டாக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்கள், அவற்றின் உள்ளடக்க வழிமுறைகள் அமைக்கப்பட்ட விதம் காரணமாக தவறான தகவல்களைப் பரப்பும் திறன் கொண்ட உள்ளடக்கத்தை பரிந்துரைக்கின்றன. அதிக எரிச்சலூட்டும் உள்ளடக்கம் பயனர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருக்கிறது. இது தீவிரவாதக் குழுக்களை ஒருங்கிணைத்து நிதி திரட்டுவதை எளிதாக்குகிறது. [8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zeng et al (2023) Public Opinion Mining on Construction Health and Safety: Latent Dirichlet Allocation Approach. Buildings 2023, 13, 927..https://doi.org/10.3390/buildings13040927
- ↑ Kurt Braatz, Friedrich Nietzsche: Eine Studie zur Theorie der Öffentlichen Meinung, Walter de Gruyter, 2011, p. 1.
- ↑ The term opinion publique appears in the chapter: "Lettre XXIV à Julie" of the book.
- ↑ Speier, Hans (1950). "Historical Development of Public Opinion". American Journal of Sociology 55 (4): 376–388. doi:10.1086/220561. பப்மெட்:15397399. http://ddd.uab.cat/record/47067.
- ↑ Donovan, Joan; Wardle, Claire. "Misinformation is Everybody's Problem Now". Items. Social Science Research Council. Retrieved 2023-02-26.
- ↑ Neubaum, German; Krämer, Nicole C. (2017-07-03). "Monitoring the Opinion of the Crowd: Psychological Mechanisms Underlying Public Opinion Perceptions on Social Media". Media Psychology 20 (3): 502–531. doi:10.1080/15213269.2016.1211539. பன்னாட்டுத் தர தொடர் எண்:1521-3269. https://doi.org/10.1080/15213269.2016.1211539.
- ↑ Kornbluh, Ambassador (ret ) Karen (2022-02-07). "Disinformation, Radicalization, and Algorithmic Amplification: What Steps Can Congress Take?". Just Security (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-02-26.
- ↑ Doxsee, Catrina; Jones, Seth G.; Thompson, Jared; Halstead, Kateryna; Hwang, Grace (2022-05-17) (in en). Pushed to Extremes: Domestic Terrorism amid Polarization and Protest. https://www.csis.org/analysis/pushed-extremes-domestic-terrorism-amid-polarization-and-protest.