பொதி (லினக்சு)
Appearance
குனு / லினக்ஸ் இயக்கு தளங்களில், மென்பொருட்களை எளிதில் நிறுவிடும் பொருட்டு, முன்னரே முறையாக தொகுத்து தருவது வழமை. நிறுவத் தயாரான நிலையிற் கிடைக்கும் இத்தகைய மென்பொருள் வடிவங்களை, பொதிகள் என அழைக்கப் படுகின்றன. .deb விகுதியுடைய கோப்புகள் டெபியன் வழி வந்த இயங்கு தளங்களிலும் .rpm விகுதியுடைய கோப்புகள் ரெட்ஹாட் வழி வந்த இயங்கு தளங்களிலும் பொதிகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.
பொதிகளை நிர்வகிக்கும் பொருட்டு சினாப்டிக், அடெப்ட் போன்ற பயன்பாடுகள் பயன்படுத்தப் படுகின்றன. இத்தகைய பயன்பாடுகளுக்கு, பொதி மேலாண்மைக் கட்டகம் (Package management system) என்று பெயர்.