பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்
இயக்கம்வி.சேகர்
தயாரிப்புஏ.ராஜேந்திரன்
கே.பார்த்திபன்
கதைவி.சேகர்
இசைசந்திரபோஸ்
நடிப்புகவுண்டமணி
செந்தில்
வாகை சந்திரசேகர்
பானுப்ரியா
மனோரமா
சார்லி
சின்னி ஜெயந்த்
கோவை சரளா
மீரா
ஒளிப்பதிவுகஜேந்திரன்
படத்தொகுப்புஏ.பி.மணிவண்ணன்
வெளியீடுநவம்பர் 28, 1991

பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என்பது 1991 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்.

வகை[தொகு]

குடும்பப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பணம் பணம் என்று பேராசை பிடித்த மனிதருக்கு குணவித்தியாசங்கள் கொண்ட மகன்கள்.கடைசி மகனுக்குப் பெரிய பணக்காரர் வீட்டில் சம்பந்தம் செய்ய வேண்டி விரும்பும் அந்த மனிதர், அவ்வாறே செய்கிறார். சம்பந்திக்கோ எதிர்பாராவிதமாக தொழிலில் இழப்பு ஏற்பட, அதிர்ச்சியில் உயிர் இழக்கிறார். வாய் பேச முடியாத பெண்ணென்றும் இரங்காமல் அப்பெண்ணை ஒழித்துக் கட்ட சதி செய்கிறார் மாமனார். துணிந்து கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் சதித்திட்டம் யாவும் அறிந்த மற்ற மருமகள்கள் ஒன்றிணைந்து அந்த அபலைப்பெண்ணின் வாழ்வை மீட்க மாமானாரை எவ்வாறு திருத்துகிறார்கள் என்பதை நகைச்சுவையோடும், சமூக உணர்வோடும் சொல்லும் திரைச்சித்திரம்.